தமிழகத்தில் காந்தி ஜெயந்தி அன்று, சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 1,200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மாநிலம் முழுதும் அனைத்து ‘டாஸ்மாக்’ மது கடைகளையும் மூட, தமிழக அரசு உத்தரவிட்டது.ஆனாலும், அரசின் தடையை மீறி, மாநிலம் முழுதும் ஆங்காங்கே, சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் மது விற்பனை நடந்ததை போலீசார் கண்டறிந்து, நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, அதிகபட்சமாக கரூரில் 72 பேர் கைது செய்யப்பட்டனர்; 523 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில், 64 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 1,800 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு மாநிலம் முழுதும், 1,200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.