Police Department News

மதுரையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

மதுரையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

மதுரையில் புதுநத்தம் ரோடு மேம்பாலப்பணி நடக்கிறது. இப்பணி நிறைவடைந்த பகுதியில் நவம்பர் 3 ம் தேதி முதல் கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாண்டியன் ஓட்டல் சந்திப்பிலிருந்து யூத் ஹாஸ்டல் நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

புதூரிலிருந்து அழகர் கோயில் வழியாக தல்லாகுளம் தமுக்கம் கோரிப்பாளையம் செல்ல பாண்டியன் ஓட்டல் சந்திப்பை கடந்து தொடர்ந்து அழகர் கோயில் ரோட்டில் பயணித்து அம்பேத்கார் சிலை அவுட் போஸ்ட் வழி செல்ல வேண்டும்.

புதூரிலிருந்து அழகர் கோயில் ரோடு வழியாக கே.கே.நகர் ஆர்ச் செல்ல வேண்டிய வாகனங்கள் பாண்டியன் ஓட்டல் சந்திப்பை கடந்து அழகர் கோயில் ரோட்டில் பயணித்து அவுட் போஸ்ட் இடதுபுறம் திரும்பி மாநகராட்சி அலுவலகம் மாவட்ட நீதி மன்றம் வழியாக செல்ல வேண்டும்

நத்தம் ரோடு ஐஓசி ரவுண்டானாவிலிருந்து தல்லாகுளம் தமுக்கம் கோரிப்பாளையத்திற்கு பாண்டியன் ஓட்டல் சாந்திப்பில் வலதுபுறம் திரும்பி அழகர் கோயில் ரோடு அம்பேத்கார் சிலை அவுட் போஸ்ட் வழியாக செல்ல வேண்டும்.

மாநகராட்சி அலுவலகம் அவுட் போஸ்ட் சந்திப்பிலிருந்து வலதுபுறம் திரும்பி அம்பேத்கார் சிலை வழியாக பாண்டியன் ஓட்டல் சந்திப்பிற்கு வாகனங்கள் செல்ல தடை தடை விதிக்கப்படுகிறது.

கே.கே.நகர் ஆர்ச்சிலிருந்து அழகர் கோயில் ரோட்டிற்கு கக்கன் சிலை மாநகராட்சி அலுவலகம் அவுட் போஸ்ட் வழி வலதுபுறம் திரும்பி பாரதியார் பூங்கா பாண்டியன் ஓட்டல் சந்திப்பு வழியாக தற்போது சென்று வரும் வாகனாப்போக்குவரத்து தடைசெய்யப்படுகிறது. இவ்வழித்தட வாகனங்கள் கக்கன் சிலை வலதுபுறம் திரும்பி யூத் ஹாஸ்டல் பாண்டியன் ஓட்டல் வழியாக அழகர் கோயில் ரோட்டிற்கு செல்ல வேண்டும் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.