Police Department News

மதுரை மாநராட்சி குறை தீர்ப்பு புதிய அலைபேசி எண் மற்றும் புதிய இணையதளம் அறிமுகம்

மதுரை மாநராட்சி குறை தீர்ப்பு புதிய அலைபேசி எண் மற்றும் புதிய இணையதளம் அறிமுகம்

மதுரை மாநகராட்சி மக்கள் குறை தீர் மையத்தின் புதிய அலைபேசி எண் 7871661787, இணையதளம் www.mducorpicts.com சேவையை மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி மாநராட்சி ஆணையாளர் திரு. சிம்ரன்ஜீத் சிங் முன்னிலையில் அமைச்சர் தியாகராஜன் அறிமுகம் செய்தார்.

அலைபேசி இணையதள புகார்காளை மாநகராட்சியில் இயங்கும் ஒருங்கிணைத்த புகார் கண்காணிப்பு மையம் (ICTS INTEGRATED COMPLAINT TRACKING SYSTEM) ஒருங்கிணைக்கும் இம்மையம் 24 மணி நேரமும் மக்களிடம் புகார்களை அலைபேசி அழைப்பு வாட்ஸ்அப் இணையதளம் வழி பெறும். புகார் பதிவானதும் குறிப்பு எண் எஸ்எம்எஸ் வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் குறிப்பு எண் மூலம் புகார் நிலை அறியலாம் புகார்கள் உரிய அலுவலர்களுக்கு மாற்றப்படும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை எனில் அடுத்த நிலை அலுவலர்களுக்கு மாற்றப்படும் அதிலும் தீர்வு கிடைக்கவில்லையெனில் ஆணையாளர் பார்வைக்கு செல்லும் மாநகராட்சி அலுவலர்கள் புகார்களுக்கு நடவடிக்கை எடுத்ததற்கான பதில் அறிக்கை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் இச்சேவை குறித்து மக்கள் நட்சத்திர மதிப்பீடு மூலம் கருத்து தெரிவிக்கலாம்

துணை மேயர் நாகராஜன் மண்டலத் தலைவர்கள் சரவண புவனேஸ்வரி பாண்டிசெல்வி முகேஷ் சர்மா துணை ஆணையாளர் முஜீபூர் ரஹ்மான் நகர் பொறியாளர் லட்சுமணன் கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன் நகர் நல அலுவலர் வினோத்குமார் செயற்பொறியாளர் பாக்கியலட்சுமி பிஆர்ஒ மகேஸ்வரன் உதவி ஆணையர்கள் வரலட்சுமி சையது முஸ்தாபா கமல் திருமலை மனோகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
8428425000 என்ற பழைய மாநகராட்சி குறை தீர் அலைபேசி எண்ணுக்கு பதில் புதிய. எண்ணை அறிமுகம் செய்துள்ளனர் அதே போல் தற்போதைய WWW.MADURAICORPORATION.CO.IN. இணையதள குறைகள் பிரிவிலேயே புதிய இணைய புகார் லிங்க் இணைத்துள்ளனர்.

சந்தீப் நந்தூரி ஆணையாளராக இருந்த போது 7449104104. 0452 2525252 புகார் எண்கள் அறிமுகமானது விசாகன் ஆணையாளராக இருந்த போது அறிமுகமான 8428425000 எண் கடந்த 3 ம் தேதி வரை பயன்பாட்டில் இருந்தது. இந்த எண்ணில் தினமும் 1000 க்கும் மேற்பட்ட புகார்கள் வந்து அவைகளுக்கு தீர்வு காணப்பட்டது இந்த நிலையில் ஏன் புதிய எண்ணை அறிமுகம் செய்தனர் என்று தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published.