Police Department News

ஆஸ்திரேலியாவில் இருந்து 7 சிலைகள் இந்தியாவுக்கு வர வேண்டும்; பொன்.மாணிக்கவேல் பேட்டி

ஆஸ்திரேலியாவில் இருந்து 7 சிலைகள் இந்தியாவுக்கு வர வேண்டும்; பொன்.மாணிக்கவேல் பேட்டி
ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து 7 சிலைகள் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று பொன்.மாணிக்கவேல் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

சென்னை,
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டது. அந்த உத்தரவில், சிறப்பு அதிகாரிக்கு அலுவலகம் மற்றும் போலீஸ் அதிகாரிகளை ஒதுக்கி தேவையான வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.
சிலை கடத்தல் வழக்குகளை விசாரணை மேற்கொண்டு வரும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன். மாணிக்கவேலின் பதவி காலம் நவம்பர் 30ந்தேதியுடன் முடிவடையவுள்ளது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது என சுட்டி காட்டி, அதனால் பொன்.மாணிக்கவேல் பதவி நீட்டிப்பு குறித்து எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியாது என்று சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டு தெரிவித்திருந்தது. இதனை அடுத்து சிலை கடத்தல் தொடர்புடைய வழக்குகளை டிசம்பர் 6ந்தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த நிலையில், பொன்.மாணிக்கவேல் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், தமிழகத்தில் இருந்து திருடப்பட்ட 2 துவார பாலகர் சிலைகளை ஆஸ்திரேலிய பிரதமர் வருகிற ஜனவரியில், இந்திய பிரதமர் மோடியிடம் ஒப்படைக்க இருக்கிறார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கை தோண்டி எடுத்து துவார பாலகர் சிலையை கண்டுபிடித்துள்ளோம். ஆஸ்திரேலியாவில் இருந்து 7 சிலைகள் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று கூறினார்.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.