கள்ளக் காதலால் காதை இழந்த மூதாட்டி – உயிர் ஊசலாடி வருகிறது.
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே கங்கப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பையன் இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது.52) இவர் கடந்த 27ஆம் தேதி அன்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை, இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள வயல்வெளியில் ரத்த காயங்களுடன் ஜெயலட்சுமி மயங்கி நிலையில் கிடந்தார்,
அவ்வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் .
உடனடியாக ஜெயலட்சுமி வீட்டிற்க்கு தகவல் தெரிவித்தனர் பின்னர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்
ஜெயலட்சுமி இரண்டு காதுகள் அறுக்கப்பட்டு அவற்றில் இருந்த தங்கத்தோடுகளை பறித்து சென்றது தெரிய வந்தது. தற்போது ஜெயலட்சுமி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார், இது குறித்து பஞ்சப்பள்ளி போலீசார் விசாரித்து வந்த நிலையில் பஞ்சப்பள்ளி அருகே உள்ள கூத்தப்பாடியை சேர்ந்த கோவில் பூசாரி மாதன் (வயது. 64) என்பவர் மூதாட்டியை தாக்கி நகை பறித்து சென்றதுதெரிய வந்தது,
அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் ஜெயலட்சுமி கணவர் இறந்துவிட்ட பிறகு மாதனுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாகவும் சமீபத்தில் வேறு இருவருடன் ஜெயலட்சுமி தொடர்பு வைத்துக் கொண்டதால் ஆத்திரம் அடைந்து அவரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் மாதன் தெரிவித்தார்,
இரும்பு கம்பியால் ஜெயலட்சுமி தாக்கிய போது அவர் மயங்கி விழுந்ததால் இறந்து விட்டதாக நினைத்து காதுகளை அறுத்து தோடுகளை திருடி சென்றதாகவும் கூறினார் இதையடுத்து மாதனை போலீசார் சிறையில் அடைத்தனர்.