சென்னை மெரினாவில் குவிந்த மக்கள்: ரோந்துப் பணியில் டிஜிபி சைலேந்திர பாபு!
காணும் பொங்கலையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்
தமிழகம் முழுவதும் ஜனவரி 15-ஆம் தேதி முதல் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வந்தது பொங்கல் பண்டிகையின் இறுதி நிகழ்வான காணும் பொங்கலன்று பொது இடங்களில் மக்கள் குவிந்தனர்
காணும் பொங்கலன்று தமிழகம் முழுவதும் பொது இடங்களில் மக்கள் கூட்டத்தை சமாளிக்க காவல்துறையினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர்
சென்னை கடற்கரைகளில் மட்டும் சுமார் 1,200 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர் கடற்கரைகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு அதிநவீன டிரோன்கள் மூலம் கண்காணிப்பு பணியில் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர் மேலும், ஹெலிகாப்டர் மூலமும் பொதுமக்களை கண்காணித்தனர்
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் பிற்பகல் முதல் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜீப்பில் சென்றபடி காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, கடற்கரையோரம் கூடியுள்ள மக்களை சந்தித்து டிஜிபி சைலேந்திர பாபு வாழ்த்து தெரிவித்தார்.