Police Department News

மதுரையில் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்

மதுரையில் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்

தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி போக்குவரத்து போலீசார் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாநகரில் போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை பெரியார் பேருந்து நிலையம் மற்றும் கோரிப்பாளையம் சந்திப்பில் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது வாகன ஓட்டிகளிடம், “தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவேன், அதிவேகமாக வாகனம் ஓட்ட மாட்டேன். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்ட மாட்டேன், இருசக்கர வாகனத்தில் 3 நபர்களுடன் பயணிக்க மாட்டேன், குடிபோதையில் வாகனம் ஓட்ட மாட்டேன், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்ட மாட்டேன், சரக்கு வாகனத்தில் அதிக பாரம் ஏற்ற மாட்டேன், பயணிகள் ஏற்றி செல்லும் வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை பின்பற்றுவேன், போக்குவரத்து சமிக்கைகளை பின் பற்றுவேன், படிக்கட்டில் பயணம் செய்ய மாட்டேன்” என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் வழங்கினர்.

இதில் தல்லாகுளம் போக்குவரத்து உதவி கமிஷனர் மாரியப்பன், உதவி கமிஷனர் செல்வின் போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் திரு. தங்கமணி நந்தகுமார் தங்கப்பாண்டி கனேஷ்ராம் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சின்ன கருத்தபாண்டி, ஆண்டவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.