சிபிசிஐடி போலீஸார் எனக் கூறி, திருப்பூரில் வியாபாரியை மிரட்டி ரூ.3 லட்சம் பறித்த கும்பலில் இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகிகள் 3 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். கோவையைச் சேர்ந்த மேலும் 3 பேரைத் தேடி வருகின்றனர்.
திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் பகுதியில் வசிப்பவர் டி.ரூடா ராம் சவுத்ரி (36). ராஜஸ்தானை சேர்ந்த இவர், கடந்த 10 ஆண்டு களாக திருப்பூர் ஓடக்காடு பகுதி யில் மளிகை வியாபார நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 25-ம் தேதி அவரது மளிகை நிறுவனத்துக்கு சென்ற 6 பேர், தாங்கள் சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்து வருவ தாக அறிமுகம் செய்து கொண்ட னர். தடை செய்யப்பட்ட புகையி லைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்துள் ளதால், கடையில் சோதனையிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் ரூடா ராம் சவுத்ரி சமாதானம் பேசியுள்ளார். உடனே, ரூ.5 லட்சம் கொடுத்தால் சோதனையை ரத்து செய்துவிட்டுச் செல்வதாக தெரிவித்துள்ளனர். நீண்ட இழுபறிக்குப் பிறகு மூன்றரை லட்சத்தில் பேரம் முடிந்தது.
முதல்கட்டமாக ரூ.3 லட்சத்தை அனுப்பர்பாளையம் புதூர் பேருந்து நிலையத்தில் வைத்து அவர்களிடம் ரூடா ராம் சவுத்ரி கொடுத்துள்ளார். மீதி பணத்தை 27-ம் தேதி தருவதாக கூறியுள்ளார். பணத்தை வாங்கிச் சென்ற அவர் கள், நேற்று முன்தினம் காலை செல்போன் மூலமாக அழைத் துள்ளனர். இதையடுத்து ரூடா ராம் சவுத்ரி அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட் டது. முதலில் அழைப்பு வந்த எண்ணை வைத்து, அம்மாபாளை யம் கணபதி நகரை சேர்ந்தவ ரும், பெரியார் காலனியில் கண் கண் ணாடிக் கடை வைத்துள்ளவருமான எஸ்.சையது இப்ராகிம் (44) என்பவரை பிடித்தனர். அவரைத் தொடர்ந்து, திருப்பூர் காங்கயம் சாலை கே.வி.பி. காலனியைச் சேர்ந்தவரும் பிரியாணி கடை நடத்திவருபவருமான எஸ்.முகமது ஹனிபா (44), டிமாண்டி வீதியைச் சேர்ந்த ஏ.சாதிக் அலி (42) ஆகி யோரைப் பிடித்தனர். விசார ணைக்கு பிறகு மூவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கட்சியில் முக்கிய பதவி
இதுகுறித்து போலீஸார் கூறும் போது, ‘ரூடா ராம் சவுத்ரி புகையி லைப் பொருட்கள் விற்பனை செய் வதை உறுதி செய்து கொண்டு அவரை மிரட்டி பணம் பறித்துள் ளனர். கைது செய்யப்பட்ட சையது இப்ராகிம், இந்திய தேசிய லீக் கட்சியின் முன்னாள் மாவட்ட ஒருங் கிணைப்பாளராகவும், முகமது ஹனிபா மாநில துணை செயலா ளராகவும், சாதிக் அலி மாவட்ட தலைவராகவும் பதவி வகிக்கின் றனர். 6 பேர் கும்பல் என்பதால் வாங்கிய பணத்தை தலா ரூ.50 ஆயிரம் வீதம் பிரித்து எடுத்துள் ளனர்.
இவ்விவகாரத்தில் 2 இருசக்கர வாகனங்கள், ரூ.55 ஆயிரம் தொகை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கும்பலில் எஞ்சியுள்ள கோவையைச் சேர்ந்த பாபு, ரஹமத்துல்லா, அஷ்ரஃப் ஆகிய மூவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை தேடி வருகிறோம். புகையிலை விற்கும் புகார் குறித்து ரூடா ராம் சவுத்ரியிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது’ என்றனர்.