மொழி தெரியாத வெளிமாநிலத்தில் வேலை செய்கிறீர்களா..?
தாய்மொழியில், தமிழ் மொழியில் மனுத்தாக்கல் சாத்தியமா..?
இந்தியாவில் பணியாற்றும் எந்த ஒரு மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்களிடமும் நீதிபதிகளிடமும் இந்திய சாசன கோட்பாடு 350ன் படி உங்களின் தாய் மொழியிலேயே மனு கொடுக்க உரிமை உண்டு.
தேவைப்பட்டால் அம்மனுவை பெறுபவர் அவரது தாய் மொழிக்கு மொழியாக்கம் செய்து விசாரணை நடத்தியதில் உத்தரவு பிறப்பித்து அதனை உங்களின் தாய் மொழிக்கு மொழியாக்கம் செய்து கொடுக்க கடமைப்பட்டவராவார். இப்படி ஒரு கோட்பாடு இருப்பது சில அரசு ஊழியர்களுக்கு தெரியாமல்தான் இருக்கிறது.
இப்படி உங்களின் தாய் மொழியில் மனு அனுப்பும்போது
இந்திய சாசனத்தின்படி அம்மனு செல்லத்தக்கதே
என்பதை அதை பரிசீலிக்க வேண்டி அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது நமது கடமையாக இருப்பதால்
மனுவின் தலைப்பில்
அல்லது பொருத்தமான இடத்தில்
“This petition submitted in my mother tongue right’s under 350 of our Indian constitution”
என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு விட்டால் அவர்களும் உங்களின் உரிமையை புரிந்து தங்களின் கடமையை உணர்ந்து செயல்பட ஏதுவாக இருக்கும்….