Police Department News

பாலக்கோடு பேளாரஅள்ளி கிராமத்தில்
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற கிராமசபைக் கூட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் கட்டாயம் சுத்தமான குடிநீர் வழங்க தீர்மானம் நிறைவேற்றம்.

பாலக்கோடு பேளாரஅள்ளி கிராமத்தில்
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற கிராமசபைக் கூட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் கட்டாயம் சுத்தமான குடிநீர் வழங்க தீர்மானம் நிறைவேற்றம்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட பேளாரஹள்ளி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் ராதா மாரியப்பன் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைப்பெற்றது.

இதில் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் குழாய் வழங்கவும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து தண்ணீர் விநியோகம் செய்தல், நீர் நிலைகளை பாதுகாத்தல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் தமிழரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளி நாதன், நீர்வளத் துறை உதவி பொறியாளர் வெங்கடேசன், கால்நடை மருத்துவர் நடராஜ், காவல் உதவி ஆய்வாளர் சின்னமாது, வி.ஏ.துரைராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் வார்டு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.