அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் ஆனந்தகுமார்.
தீயணைப்பு நிலைய குடியிருப்பில் குடியிருந்து வரும் வெள்ளைச்சாமி மகன் ஆனந்தகுமார் என்பவர் 13.04 .2023 தேதியன்று மாலை தனது இருசக்கர வாகனமான TN 11 L 3003 என்ற ஹோண்டா யூனிகார்ன் வாகனத்தில் அருப்புக்கோட்டையில் உள்ள கீர்த்தி மெஸ் சென்று தனது இரு சக்கர வாகனத்தை கீர்த்தி மெஸ் வாகன நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு தேனீர் அருந்திவிட்டு பின்னர் அங்கிருந்து நிலைய பணியின் காரணமாக நிலையத்தில் பணிபுரியும் அலுவலர்களோடு கடைதெருவிற்கு சென்று விட்டு மீண்டும் நிலையம் திரும்பி மறுநாள் 14. 4 2023 ஆம் தேதி காலை 10 மணி அளவில் தான் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது வாகனம் திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்பு வாகன திருட்டுபோனது சம்மந்தமாக ஆனந்தகுமார் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
அருப்புக்கோட்டை உட்கோட்ட உதவி கண்காணிப்பாளர் திரு கருண் கரட் மேற்பார்வையில் நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி சோபியா உத்தரவின் பேரில் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் எஸ் ராமச்சந்திரன் உமா மாலினி சிறப்பு சார்பு ஆய்வாளர் தவமணி தலைமை காவலர்கள் ராமமூர்த்தி கணேஷ்குமார் ரவிஜோதி ஜோயல் ராம்கி ஆகியோர் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நேரடி விசாரணை செய்து இரண்டு மணி நேரத்தில் திருடு போன இரண்டு சக்கர வாகனத்தை திருடி சென்ற கல்லூரணி சேர்ந்த பெருமாள் மகன் முரளிதரன் மற்றும் நாகூர் ஹனி ஆகியோரை கைது செய்து திருடப்பட்ட வாகனத்தை பத்திரமாக மீட்டனர்
பின்பு குற்றவாளிகளை கைதுசெய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.