பாலக்கோடு ஆரதஅள்ளி அருகே உணவு பொருட்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைப்பெற்றது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த ஆரதஅள்ளி அருகே உள்ள உணவு பொருட்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் தீயனைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில்
தீ விபத்து மற்றும் மழை காலங்களில் ஆபத்துக்களில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது குறித்தும்,
தீடீரென பற்றி எரியும் கேஸ் சிலிண்டர்கள் மீது ஈரமான சாக்குபைகளை கொண்டு எவ்வாறு அனைக்க வேண்டும் என்றும் பெட்ரோல், மண்ணென்னை ஆகியவற்றால் ஏற்படும் தீ விபத்துக்களை மணல், மண் ஆகியவற்றை கொண்டு அனைப்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
தீ தடுப்பு கருவிகள் எப்போதும் பயன்படும் வகையில் தயார் நிலையில் வைத்திருக் வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் தீ தடுப்பு குறித்து செயல் விளக்கத்தோடு ஒத்திகை நிகழ்ச்சிகளை தீயனைப்பு வீரர்கள் செய்து காட்டினர்.