Police Department News

பாலக்கோட்டில், குளிர்பானங்கள் மற்றும் பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு.

பாலக்கோட்டில், குளிர்பானங்கள் மற்றும் பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு.

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை மாநில ஆணையர் உத்தரவின் பேரில்,தர்மபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர்.ஏ. பானு சுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், குளிர்பான தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்கள் , பழரச விற்பனை நிலையங்கள், ஐஸ்கிரீம் விற்பனை கூடங்கள் மற்றும் நடைபாதை குளிர்பான , பழகடைகளில், ஆய்வு செய்ய உத்தரவிட்டதன் பேரில் இன்றைய தினம் பாலக்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாவட்ட நியமன அலுவலர் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மருத்துவர். பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ். அவர்கள் மேற்பார்வையில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பாலக்கோடு பஸ் நிலையம், எம். ஜி. ரோடு, ஓசூர் மெயின் ரோடு, தக்காளி மார்க்கெட், பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளிர்பான மொத்த விற்பனை நிலையங்கள், சிறு விற்பனை நிலையங்கள், பழரச விற்பனை நிலையங்கள் மற்றும் நடைபாதை குளிர்பான கடைகள் மேலும் மாம்பழம் குடோன்களை திடீர் ஆய்வு செய்தார் .

ஆய்வின் போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்கள், குளிர்பானங்களில் உரிய தயாரிப்பு தேதி, முடிவு தேதி மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் உள்ளனவா என ஆய்வு செய்தார். மேலும் குளிர்பானங்கள், குடிநீர் கேன்கள், குடிநீர் பாட்டல்கள்நேரடியான வெயில் படாமல் விற்பனை செய்யவும், வண்டிகளில் சப்ளை செய்வோர் உரிய பாதுகாப்பான கூடாரமிட்ட அல்லது தார்பாய்கள் போர்த்தப்பட்ட வண்டிகளில் வெயில் படாமல் சப்ளை செய்ய விழிப்புணர்வு செய்தனர்.
இன்றைய ஆய்வின் போது இரண்டு கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் 2 லிட்டர் கொள்ளளவுள்ள 6 பாட்டில்கள்மற்றும் உரிய தேதி அச்சிடாத 20 லிட்டர் குடிநீர் கேன்கள் பத்தும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது . மேற்படி கடை உரிமையாளர்களுக்கு தலா ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் திறந்த நிலையில் அதிக வெயில் பட்ட நிலையில் குளிர் பானங்கள் விநியோகம் செய்த விற்பனையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் உடன் உடனடி அபராதம் ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டது.
மேலும் பழரசங்கள், குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் குல்பி தயாரித்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் தரமான பழங்களையும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரையும், தரமான ஐஸ் கட்டிகளையும் , பார்களையும் குளிர்பானங்களுக்கு பயன்படுத்த வேண்டும் மேலும் பணியாளர்கள் சுத்தமாக சுகாதாரமான முறையில் ஆடைகள், உரிய கவச உரைகள் அணிந்திருக்கவும் முறையாக பழங்களையும், மிக்ஸி போன்ற பிடிப்பான்களையும், உபயோகப்படுத்தும் பாத்திரங்கள், உபகரணங்கள் அவ்வப்போது சுத்தம் செய்து பராமரித்தல் வேண்டும் எனவும் இனிப்பு சுவை அதிகரிக்க தேவையற்ற சுவையூட்டிகளோ, தரமற்ற வேதிப்பொருள்கள் ஏதும் கலப்பதோ கூடாது என எச்சரிக்கப்பட்டது.
மாம்பழ சீசன் துவங்கியுள்ள நிலையில் மாம்பழ வியாபாரிகள், விற்பனையாளர்கள் காய்கள் சீக்கிரம் விற்பதற்காக காய்களைப் பழுக்க வைக்க செயற்கையான முறையில் கார்பைட் கற்களையோ, ரசாயன வேதிப்பொருளையும் உபயோகப்படுத்த கூடாது என எச்சரிக்கப்பட்டது. தவறுகள் கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் படி நடவடிக்கை மேற்கொள்ளும் அபராதமும் விதிக்கப்படும் எனவும் மாவட்ட நியமன அலுவலர் எச்சரிக்கை செய்தார். இது போன்ற ஆய்வுகள் மாவட்டம் முழுதும் இந்த இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் எனவும் பொதுமக்களும் கோடை வெயிலில் தாகம் தணிக்க இயற்கையான பானங்கள் இளநீர், பழரசங்கள், பழங்கள், மோர் மற்றும் தரமான பொருட்கள் வாங்கி தரமான குளிர்பானங்கள் உபயோகப்படுத்த கேட்டுக் கொண்டார். மேலும் பழங்கள் வாங்கிய பின் வெதுவெதுப்பான வெந்நீரில் சிறிது நேரம் வைத்திருந்து அதில் அலசிவிட்டு தண்ணீரில் கழுவி பழங்களை உபயோகப்படுத்தினால் நன்று என விழிப்புணர்வு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.