Police Department News

மந்திரம் மாந்திரீகம் செய்வதாக கூறி பண மோசடி செய்த கேரளாவை சேர்ந்த மோசடி பேர்வழி கைது

மந்திரம் மாந்திரீகம் செய்வதாக கூறி பண மோசடி செய்த கேரளாவை சேர்ந்த மோசடி பேர்வழி கைது

சென்னை ஆண்டர்சன் சாலையை சேர்ந்த திரு கௌதம் சிவசாமி என்பவர் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் தான் கடந்த 2005 ஆம் ஆண்டு நைஜீரியா நாட்டில் வேலை செய்த போது உடன் வேலை செய்து வந்த கேரளாவை சேர்ந்த சுப்ரமணி என்பவர் அறிமுகமானதாகவும் அதன் பின்னர் தாங்கள் இருவரும் நல்ல குடும்ப நண்பர்களாக பழகியதாகவும் தான் மிகுந்த கடவுள் பக்தி உடையவர் என்பதை தெரிந்து கொண்ட சுப்பிரமணி தன்னை அடிக்கடி கோவில்களுக்கு அழைத்துச் சென்று ஆன்மீக வழிகளில் ஈடு படுத்தியும் புட்ட பருத்தி சாய்பாபா அவரிடம் நேரடியாக பேசுவதாக கூறி தன்னை நம்ப வைத்தும் தன்னை அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று இறந்து போன தன்னுடைய அம்மாவின் ஆன்மா அவரிடம் பேசுவதாக கூறியும் பூஜை அறையில் சாமி படத்தில் இருந்து விபூதியை விழா செய்தோம் திடீரென்று எலுமிச்சம் பழம் வரவழைத்தும் மந்திர மாயாஜால வித்தைகள் செய்து தன்னை மிஸ் மெரிசம் செய்து தன்னிடம் இருந்து கடந்த 2015 முதல் 2019 வரையிலான காலத்தில் வங்கி பரிவர்த்தனை மற்றும் ரொக்கமாக மொத்தமாக ரூ
2 கோடிக்கு மேல் பணத்தைப் பெற்றுக் கொண்டு நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றியதாகவும் பின்னர் சுப்பிரமணியின் மோசடி செயல்கள் தெரிந்து தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோது சுப்பிரமணி கொடுக்க மறுத்து தன்னை மிரட்டியதாகவும் எனவே இது சம்பந்தமாக சுப்பிரமணி மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரக் கோரி கொடுத்த புகாரின் அடிப்படையில் 17.5.2022 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு எண் 107/2022 U/s.406,420 IPC பிரிவில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த சுப்பிரமணி என்பவரை கைது செய்ய வேண்டி காவல் ஆணையாளர் உத்தரிவிட்டதன் பேரில் கூடுதல் காவல் ஆணையாளர் திருமதி .மகேஸ்வரி I.P.S அவர்கள் வழிகாட்டுதலில் துணை ஆணையாளர் திருமதி.K. மீனா,T.P.S., அவர்கள் மேற்பார்வையில் கூடுதல் காவல் ஆணையாளர் திரு. அசோகன் அவர்கள் அறிவுரையின் பேரில், உதவி ஆணையாளர் திரு .ஜான் விக்டர் தலைமையில் தனி படை அமைக்கப்பட்டு இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த சுப்பிரமணி என்பவரை 9.5.2023 ஆம் தேதி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் வைத்து கைது செய்து 10.05.2023 தேதி கணம் மத்திய குற்றப்பிரிவு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எழும்பூர் அவர்கள் முன்பு ஆதார் படுத்தி உத்தரவுப்படி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
விசாரணை அதிகாரி திருமதி. K. சுஜாதா உதவி ஆய்வாளர்(EDF-1) Team-1,அலைபேசி;9498129051.

Leave a Reply

Your email address will not be published.