வழக்கறிஞர்களின் வேலை நிறுத்தமும் நீதி மன்ற புறக்கணிப்பும்
வழக்கறிஞர்களின் வேலை நிறுத்தம், நீதிமன்ற புறக்கணிப்பு நீண்ட காலத்திற்கு வேண்டதகாத பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. எனவே அதை மிக கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும் நமது குடியரசு ஆட்சியிலே எதிர்ப்பு தெரிவித்தல் என்பது ஒவ்வொரு குடிமகனிடமும் உள்ள தேவையான ஆயுதம் ஆகும் என்பது உண்மைதான் அஹிம்சை வழியில்தான் நாம் விடுதலை பெற்றோம் என்பது மறுக்க முடியாத உண்மையே மற்ற எதிர்ப்பு தெரிவிக்கும் வழிமுறைகளை போன்றே வேலை நிறுத்தம் செய்யும் உரிமையும் அதிகாரவர்க்கத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது மறுப்பு தெரிவித்தலை உணர செய்வதுடன் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிடவும் வழி பிறக்கிறது. ஆனால் நீதி மன்ற நடவடிக்கைகள் வேறு வகையான நிலைப்பாடு உடையவை. இந்த நடவடிக்கைகள் வேலை நிறுத்தத்தாலோ நீதி மன்ற புறக்கணிப்பாலோ தடைபட்டு நிற்கக்கூடாது.
வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் போது அவர்களது வாடிக்கையாளர்களான கட்சிக்காரர்களே மிகவும் சிரமப்படுகிறார்கள் வேலை நிறுத்த சமயத்தில் வழக்கறிர்கள் நீதி மன்ற ஆணை பெறுதல் ஜாமீன் எடுத்தல் போன்ற அவசர வேலைகளை செய்வதாக கூறி தங்களது பணத்தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் தங்களின் ஓய்வு நேரத்தை அவர்கள் பணமாக்கி கொள்ளலாம் அதே போன்று நீதிபதிகளுக்கும் இழப்பேதுமில்லை கட்சிகாரர்களின் செலவில் அனைவரும் நிம்மதியாக இருப்பார்கள் ஆனால் வேலை நிறுத்தம் முடியும் வரை பொறுமையாக காத்திருப்பதை தவிர கட்சிக்காரர்களுக்கு வேறு வழியில்லை.
வேலை நிறுத்தத்தாலும் நீதி மன்ற புறக்கணிப்பாலும் நீதி மன்றத்தின் வழக்கமான வேலைகள் ஸ்தம்பித்து நின்று விடுகின்றன. இதனால் நீதி வழங்குவது தாமதமாவதுடன் வாடிக்கையாளர்களும் துன்பத்திற்கு ஆளாகின்றனார் பரிதாபத்திற்குறிய கட்சிக்காரர்களே மிகவும் பாதிப்படைகின்றனர்.வேலை நிறுத்தங்கள் நீதி மன்ற புறக்கணிப்புகள் வழக்கறிஞர்களுக்கு தேவைதானா? ஒவ்வொரு நீதி மன்றத்திலும் வழக்குகள் மலைபோல் தேங்கி கிடக்கும் நிலையில் வழக்கறிஞர்களின் வேலை நிறுத்தத்தால் நிலைமை மேலும் மோசமாகும் வழக்கறிஞர்களின் இச்செயல் மிகவும் கண்டனத்திற்குறியது என்பதோடு எல்லா தரப்பு மக்களும் இதனை பழித்துரைப்பர். வழக்கறிஞர்களின் வேலை நிறுத்தம் நேர்மையற்றது சட்ட விரோதமானது ஆகும் என்பது பலரின் கருத்தாகும் சட்ட கமிஷனின் 131 வது அறிக்கை பரிந்துரைப்பது யாதெனில் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவே கூடாது என்பதுதான் இதனால் சட்டத்துறையின் எதேச்சையதிகார கூறுகள் அரிக்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.