பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு இன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு இன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.
தாசில்தார் ராஜா தலைமையில் அலுவலக பணியாளர்கள் ஊழியர்கள் உள்ளிட்ட வருவாய் துறையினர் பின்வருமாறு உறுதி மொழி ஏற்றனர்.
அதில் இந்திய குடிமகனாகிய நான் முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும், மனோரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் எனவும்,
அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன் என்றும்,
பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள், வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதனை தடுத்திட பாடு படுவேன் என உளமாற உறுதி கூறுகின்றேன் என உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.