Police Department News

மரணத்தை விளைவிக்கக்கூடிய பயங்கர ஆயுதங்களுடன் நான்கு நபர்கள் கைது

மரணத்தை விளைவிக்கக்கூடிய பயங்கர ஆயுதங்களுடன் நான்கு நபர்கள் கைது.

நேற்று (17.12.2019) V2-அவனியாபுரம் சட்டம் & ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் திரு.காசி மற்றும் ரோந்து காவலர்கள் திரு.பரமசிவம், திரு.லோகநாதன் மற்றும் திரு.சேக் அப்துல் காதர் ஆகியோர்கரளுடன் பத்மா தியேட்டர் அருகே ரோந்து பணியில் இருந்தபோது சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 1) மணி மாறன் என்ற நொண்டி 29/19, த/பெ.முனியசாமி, பத்மா தியேட்டர் காலனி, மதுரை.
2) கார்த்தி என்ற குட்டை கார்த்தி 25/19, த/பெ. காரணம், காந்திபுரம் பாண்டியன் நகர், கோ.புதூர், மதுரை.
3) கண்ணாயிரமூர்த்தி 28/19, த/பெ.முத்து, TNHB காலனி, வில்லாபுரம், மதுரை.
4) முருகன் 28/19, த/பெ.பச்சைமால், மூன்றுமாவடி காலனி, மதுரை ஆகிய நால்வரிடமும் விசாரணை முடித்து
திரேக சோதனை செய்தபோது அவர்கள் முதுகுக்குப் பின்னால் ஆபத்தை விளைவிக்கக்கூடிய வாள்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் விசாரித்தபோது முன்விரோதம் காரணமாக தனது நண்பரை ஏற்கனவே கத்தியால் தாக்கிய ஒரு நபரை கொலை செய்ய ஆளுக்கு ஒரு வாளை வைத்துக்கொண்டு பத்மா தியேட்டர் காலனி அருகே நின்று, கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருந்ததாகவும் விசாரணை முடிவில் தெரிவித்தனர். மேலும் மேற்படி நான்கு நபர்கள் மீதும் கொலை வழக்கு இருப்பதும் தெரியவந்தது. எனவே அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து நான்கு வாள்கள் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். காவல்துறையினர் மேற்படி குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுத்து, நான்கு நபர்களையும் பிடித்த சிறப்பாக புலன்விசாரணை மேற்கொண்ட ரோந்து காவலர்களை, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் பாராட்டினார்.

ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.

Leave a Reply

Your email address will not be published.