விருதுநகர் மாவட்டம்:-
அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பில் ஒளிரும் வில்லைகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
அவரவர் வேண்டுதலுக்காக பக்தர்கள் பலரும் பல்வேறு ஊர்களிலில் இருந்தும் அருப்புக்கோட்டை வழியாக திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்லும் வழக்கமாகும்.
அவ்வாறு செல்லும் பக்தர்களுக்கு சாலையில் பாதுகாப்பாக செல்வதற்கு இருளில் ஒளிரும் வகையில் வில்லைகளை அவர்கள் கொண்டு செல்லும் உடமைகளில் ஒட்டியும் பாதுகாப்புடன் செல்லுமாறு அறிவுரைகளை எடுத்துக்கூறி நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.செந்தில்வேலன் அவர்கள் வழியனுப்பி வைத்தார்.
அத்துடன் சார்பு ஆய்வாளர் மற்றும் சக காவலர்கள் உடனிருந்தனர்.