Police Department News

லஞ்சம் வாங்குவோரை பிடித்த சார்பு ஆய்வாளருக்கு ஜனாதிபதி பதக்கம்

லஞ்சம் வாங்குவோரை பிடித்த சார்பு ஆய்வாளருக்கு ஜனாதிபதி பதக்கம்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொடுவாயூரை சேர்ந்த பாலன் தேவகி தம்பதியரின் மகன் சுரேந்திரன் இவர் கேரள மாநிலம் பாலக்காடு லஞ்ச ஒழிப்பு பிரிவில் சார்பு ஆய்வாளராக பணிபுரியும்இவர் சிறந்த சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் பெற்றார்.

இவர் கடந்த 3 ஆண்டுகளில் மோட்டார் வாகனத்துறை, விலங்குகள் நலத்துறை சோதனைச்சாவடிகள் பாலகயம் வில்லேஜ் கள உதவியாளர் அலுவலகம் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தி லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் ஊழியர்களை கையும் களவுமாக பிடித்துள்ளார்

ஜனாதிபதி பதக்கம் பெற்றது குறித்து சார்பு ஆய்வாளர் சுரேந்திரன் கூறியதாவது 12 டி.எஸ்.பி., களுடன் பணிபுரிந்துள்ளேன் உயர் அதிகாரிகளின் ஊக்குவிப்பும் உடன் பணியாற்றியவர்களின் ஒத்துழைப்பும்தான் லஞ்சம் பெறுவோரை கையும் களவுமாக பிடிப்பதற்கு காரணமாக இருந்தது என்றார்.

கடந்த 2019 ல் லஞ்ச ஒழிப்பு துறையின் பேட்ஜ் ஆப் ஹானர் விருது கிடைத்தது. 2021 ல் முதல்வரின் போலீஸ் பதக்கம் பெற்றேன் இப்போது ஜனாதிபதி பதக்கம் கிடைத்துள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published.