இறுதி ஊர்வலங்களில் சாலையில் மலர்களை வீச தடை விதித்து டிஜிபி சுற்றறிக்கை
இறந்த நபர்களின் இறுதி ஊர்வலத்தின் போது சில கட்டுப்பாடுகளை விதித்து டிஜிபி சங்கர் ஜிவால் போலீசாருக்கு கடந்த 20 ம் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது இறுதி ஊர்வலம் என்பது மக்களின் கலாச்சாரம், உணர்வு பூர்வமான விவகாரம், அதே நேரம், பொதுமக்களின் உயிர் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது இந்த விவகாரத்தில் அந்தந்த போலீஸ் நிலைய காவல் ஆய்வாளர்கள் கீழே குறிப்பிட்டு இருக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
இறந்தவரின் உறவினர்கள் இறுதி ஊர்வலம் எப்பொழுது, எவ்வழியாக ஊர்வலம் செல்லும் என்ற விவரங்களை முன்னரே போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் ஊர்வலம் செல்லும் வழியில் போக்குவரத்து சரி செய்து கொடுக்கப்பட வேண்டும் இறந்தவரின் உடல் மீது போடப்படும் மாலைகள் மலர் வளையங்களை வீட்டின் அருகிலேயே பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்
ஊர்வலத்தில் அதிக அளவில் மாலைகள் மலர் வளையங்கள் கொண்டு செல்லக்கூடாது அவைகளை சாலையில் வீசக்கூடாது அதை மீறி சாலைகளில் வீசப்பட்டால் உள்ளூர் போலீசார் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இல்லாதவாறு அவற்றை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக. உடனே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
அனுமதி இன்றி மரணம் குறித்த அறிவிப்பு விளம்பர பலகைகள் பேனர்கள் வைக்க கூடாது நெடுஞ்சாலைகள் பிரதான சாலைகள் உயிர் மட்ட பாலங்களில் இறுதி ஊர்வலம் நடத்துவதை உறவினர்கள் தவிர்க்க வேண்டும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் எதுவும் ஏற்படாதவாறு தகுந்த நடவடிக்கையை போலீசார் எடுக்க வேண்டும் பொது மக்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நிபந்தனகளை யாரும் மீறக் கூடாது மீறினால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது