
மதுரையில் கஞ்சா கடத்தல் வழக்கில் இருவருக்கு மூன்று வருட சிறை தண்டனை மற்றும் தலா 15,000 அபராதம்
மதுரை திலகர் திடல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2024 ஆம் ஆண்டுதொடரப்பட்ட கஞ்சா கடத்தல் வழக்கில் வழக்கின் முக்கிய குற்றவாளிகளான சுப்பராயலு மற்றும் பாலமுருகன் ஆகியோருக்கு உரிய நீதிமன்ற விசாரணைக்கு பின் மூன்று வருட சிறைத் தண்டனை மற்றும் தலா 15,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை பெற்றுத் தந்த காவல்துறையினரை மதுரை மாநகர காவல் துறை சார்பாக மதுரை மாநகர காவல் ஆணையர் திரு J. லோகநாதன் ஐ.பி.எஸ்., அவர்கள் தனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்தார்
