திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தின் புதிய காவல் ஆய்வாளராக சிவகாசியிலிருந்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் திரு. வெங்கடாஜலபதி அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார்.
பின்பு அவர் திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளிப்பிரியா அவர்கள் டி.ஐ.ஜி., விஜயகுமாரி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். ஒட்டன்சத்திரம் போலீசார் மற்றும் சார்பு ஆய்வாளர்களுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினார், புதிய காவல் ஆய்வாளர் திரு. வெங்கடாஜலபதி அவர்களின் பணி சிறக்க போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள்.