
இரயில்வே பாதுகாப்பு படையின் மதுரை பிரிவினரின் ஹர் கர் திரங்கா (அனைவரின் வீடுகளிலும் மூவர்ணக்கொடி) பிரச்சாரத்தை கொண்டாடுவது தொடர்பாக மோட்டார் சைக்கிள் பேரணி
மதுரை ரயிவே பாதுகாப்பு படையினர் 79 வது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு ஹர் கர் திரங்கா பிரச்சாரம் ஆகஸ்ட் 14, 2025 அன்று, ஒரு மோட்டார் சைக்கிள் பேரணியை ஏற்பாடு செய்தது. இதனை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஸ்ரீ. எல். என். ராவ், ஐ.ஆர்.எஸ்.இ., கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் அவர்களால் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது. மதுரை கோட்ட பாதுகாப்பு ஆணையர் மற்றும் உதவி பாதுகாப்பு ஆணையர் முன்னிலையில், 40 ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் உற்சாகமான முறையில் பங்கேற்று கொண்டனர். ரயில்வே கோட்ட அலுவலகத்தில் இருந்து காலை 8:30 மணிக்குத் தொடங்கிய இந்தப் பேரணி, பெரியார் பேருந்து நிலையம் உட்பட மதுரையின் முக்கியப் பகுதிகள் வழியாகச் சென்று, காலை 9:30 மணிக்கு கோட்ட பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. தேசிய பெருமை மற்றும் சமூக ஈடுபாட்டிற்கான RPF இன் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில் ஊடகங்கள் தங்களது ஊடகங்களில் இந்த நிகழ்வை ஒளிபரப்பின. உள்ளூர் காவல்துறையினரால் போதுமான பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
