
மதுரை திருமலை நாயக்கர் மஹால் அருகே புற காவல் நிலையம் திறப்பு
மதுரை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி , மாநகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் ஒன்றான தெற்குவாசல் காவல்நிலையத்திற்குட்பட்ட திருமலைநாயக்கர் மஹால் அருகே பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய புறக்காவல் நிலையத்தை மாநகர காவல் ஆணையர் அவர்கள் திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார். காவல் துணை ஆணையர் (தெற்கு ) அவர்கள் உடனிருந்தார். மேலும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தப்பி செல்ல முயலும் வாகனங்களை அகச்சிவப்பு கதிர்கள் மூலம், வாகன எண்களை துல்லியமாக படம் பிடித்து வாகன விபரங்களை எளிய முறையில் அடையாளம் காணும் வகையிலான, அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்பது இப்புறக்காவல்நிலையத்தின் தனிச்சிறப்பாகும். இந்நிகழ்வில் காவல்துறையினர் மற்றும் அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
