ஒத்திகையே இப்படி..! அசரவைக்கும் தமிழக காவல்துறை..! (படங்கள்)
ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழக காவல்துறை மற்றும் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் நடைபெறவிருக்கும் குடியரசு தின அணிவகுப்புக்கான ஒத்திகை இன்று நடைபெற்றது. சென்னை, மெரினா அருகிலுள்ள காமராஜர் சாலையில் நடைபெற்ற ஒத்திகையில் காவல்துறையின் குதிரை படை அணிவகுப்பு, போக்குவரத்து காவல்துறையின் அணிவகுப்பு, காவல்துறையின் பெண்கள் பிரிவின் அணிவகுப்பு,என பல்வேறு நிகழ்வுகள் ஒத்திகைப் பார்க்கப்பட்டன.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்