சிதம்பரம் கோவிலில் உண்டியல் உடைப்பு.. லட்சக்கணக்கில் கொள்ளை!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் உள்ள சிறப்புவாய்ந்த கோவில்களில் தில்லை அம்மன் கோவிலும் ஒன்று. நடராஜர் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் தில்லையம்மன் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வார்கள். இதனால் இந்த கோயிலில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும் ஒவ்வொரு நாளும் ராகு காலத்தில் இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் நடப்பதால் சிறப்பாக இருக்கும். இந்த கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பக்தர்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்துவார்கள். உண்டியலை எண்ணும்போது பல லட்சங்கள் இருக்கும். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு கோவிலுக்கு உள்ளே உள்ள அறநிலைதுறை அலுவலகம் முன்பு இருந்த பெரிய உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து அதிலுள்ள லட்சக்கணக்கான இருந்த பணம் மற்றும் பக்தர்கள் செலுத்திய தங்கநகைகள் ஆகியவைகளை திருடி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.ஞாயிறு காலை கோவிலை திறந்து பார்த்தபோது உண்டியல் உடைத்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோவில் ஊழியர்கள் சிதம்பரம் காவல்துறையில் புகார் அளித்தனர். இதுகுறித்து சிதம்பரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து சிசிடிவி கேமரா பதிவு மற்றும் கோவில் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.தற்போது நடராஜர் கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழா மற்றும் பொங்கல் திருவிழாவின் போது தில்லையம்மன் கோவிலுக்கு அதிகமான பக்தர்கள் வந்து சென்றார்கள். இதனால் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது கோவில் உண்டியல்களில் அதிக காணிக்கைகளும் செலுத்தப்பட்டதாக பக்தர் மத்தியில் கூறப்படுகிறது.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்