அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்றுத்திறனாளி சிறுமி அடிக்கடி தனக்கு வயிற்றில் கடுமையாக வலி எற்படுவதாக தன்னுடைய சகோதரியிடம் தெரிவித்தார். சகோதரி சிறுமியை விசாரித்தபோது போது, தன்னை அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், சில நேரங்களில் மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்தார். இதை பெற்றொரின் கவனத்திற்கு எடுத்து செல்ல, அவர்கள் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2018 ம் ஆண்டு ஜூன் மாதம் புகார் அளித்தனர்இந்த புகாரால் கடந்த 2018 ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி ஒரு சிறுமி 17 பேரால் தொடர்ந்து பல முறை, பல நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்த தகவலின் அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்து வந்த வாட்ச்மேன், குடிநீர் விநியோகிப்பவர், லிப்ட் ஆப்ரேட்டர், வீட்டு வேலை செய்பவர் என 25வயது முதல் 66 வயது வரை உள்ள மொத்தம் 17பேர் கடந்த 2018 ஜூலை 16 ம் தேதி கைது செய்யப்பட்டனர். காவல்துறை குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் மரணத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது, மிரட்டல், கொலைமிரட்டல், போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் தொல்லை கொடுத்தது, பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட பிரிவுகளில் மட்டும் வழக்கு பதிவு செய்திருந்தது. இதனிடையே, 17பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கடந்த 2018 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் A.K.விஸ்வநாதன் அவர்கள் உத்தரவிட்டார்.12 வயது சிறுமி பாதிக்கப்பட்டுள்ள வழக்கு என்பதால் இந்த வழக்கில் அரசு தரப்பில் கடந்த 2018 ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி சென்னை பெருநகர காவல் ஆணையர் வேண்டுகோளை ஏற்று வழக்கறிஞர் N.ரமேஷ் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு, இந்த வழக்கில் குற்ற சுமத்தப்பட்டவர்கள் மீது கூடுதல் குற்றப்பிரிவுகள் சேர்க்கப்பட்டது. அதில் 12 வயதுக்கு குறைவான குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தது, 12 வயதிற்கு கீழ் உள்ள சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்தது, அவர் இந்த வழக்கில் 17 பேர் மீது போடப்பட்டுள்ள வழக்கு பிரிவுகளை ஆராய்ந்து, அவற்றில் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டது. 2018 செப்டம்பர் 12 ம் தேதி 17 பேர் மீது 300 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையை காவல்துறை தாக்கல் செய்தது. 2018 நவம்பர் மாதம் 13 ம் தேதி, நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை தொடங்கியது. சிறுமியின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட்டு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி உயர்நீதிமன்றம் ரத்து செய்த பின்னரும், 17 பேருக்கும் ஜாமின் கிடைக்கவில்லை. இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 7 சாட்சிகளும், அரசு தரப்பில் 36 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு, தொடர்புடைய 120 ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையல், விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பர்6 ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் சென்னை மாவட்ட சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு நீதின்ற நீதிபதி மஞ்சுளா இன்று தீர்ப்பு வழங்கினார்.அதில் வழக்கில் 15 பேர் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.விரைவாக முடித்த சென்னை மாநகர காவல் ஆணையர் A.K.விஸ்வநாதன் மற்றும் சிறப்பு வழக்கறிஞர் N.ரமேஷ் ஆகியோர் பாரட்டுக்குரியவர்கள்.
