திருநெல்வேலி மாவட்டம்:-
காட்டுவிலங்குகள் எண்ணிக்கையில் ஏராளம் அதில் மனிதர்கள் வேட்டையாடுவதில் அலாதிபிரியம் உள்ளவர்கள் ஏனையோர்.
அதனை தடுக்கும்விதமாக அரசாங்கம் பலநடடிக்கைகளை எடுத்துவருகிறது.
ஆனால் அதையும் மீறி வேட்டையாடுதல் இறைச்சிக்காகவும்,கெளரவத்திற்காகவும் செய்துவருகின்றனர்.
அதன்விளைவு பல அரியவகை பறவை,மான்,முயல்,இவைகள் சிறிது சிறிதாக அழியும் விளிம்பில் இருந்துவருகிறது.
அதை தடுப்பதற்காகவே
நெல்லை பேட்டை நரிக்குறவர் காலனியில் வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுப்பது தொடர்பாக நெல்லை மண்டல வன பாதுகாப்பு படை உதவி வன பாதுகாவலர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
நெல்லை பேட்டை நரிக்குறவர் காலனியில் சாலையோரங்களில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நரிக்குறவர்களிடம் நெல்லை மண்டல வன பாதுகாப்பு படை உதவி வன பாதுகாவலர் திரு. ஹேமலதா அவர்கள் வன விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்கும் விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அப்போது அவர் நரிக்குறவர்களிடம் கூறுகையில்
வனவிலங்குகளை வேட்டையாட கூடிய பொருட்களை விற்பனை செய்யக்கூடாது எனவும், வனப்பகுதிக்கு முயல் உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்.
காட்டுப் பகுதிக்குச் சென்று தேன் எடுக்ககூடாது.
கவன்(உண்டிவில்) போன்ற பொருட்களை விற்பனை செய்யும் பொழுது அதனை சிறுவர்கள் வாங்கிக்கொண்டு சிறுபறவை இனங்களை மையமாகக்கொண்டு வேட்டையாடுகிறார்கள்.
எனவே இது போன்ற பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என நரிக்குறவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக
VRK.ஜெயராமன்MA,Mphil மாநில செய்தியாளர்
விருதுநகர் மாவட்டம்.