கொரோனாவில் பொதுமக்களின் நண்பனாக இருந்த செம்மஞ்சேரி காவல்துறை ஆய்வாளர் திரு .விஜயகுமார் அவர்கள் (சட்டம் ஒழுங்கு)
மதிப்பிற்குரிய டிஜிபி திரிபாதி ஐபிஎஸ் மற்றும் மதிப்பிற்குரிய சென்னை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் அவர்கள் ஆணைக்கிணங்க பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பற்றி பொதுமக்களின் பாதுகாப்பு நலனுக்காக செம்மஞ்சேரி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஐயா திரு. விஜயகுமார் அவர்கள் செம்மஞ்சேரி தமிழ்நாடு ஹவுஸிங் போர்டு குடியிருப்பு மற்றும் சோழிங்கநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ளஇடங்களில் இரவு பகல் பாராமல் பொதுமக்களுக்காக அந்தந்த பகுதியில் வாழும் மக்களிடம் சென்று கொரோனா விழிப்புணர்வு பற்றியும் மக்களின் உயிருக்கு சேதம் விளைவிக்காத படி நேரில் சென்று அறிவுரை வழங்கினார். அதுமட்டுமில்லாமல் குடிப்பழக்கம் குட்கா கஞ்சா போன்ற போதைப் பொருட்களால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி மிகவும் அன்பாகவும் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படக்கூடாது என்ற நல்ல நோக்கில் திரு விஜயகுமார் ஆய்வாளர் அவர்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒவ்வொரு காவலர்களுக்கும் உடல்நிலை சீராக இருக்கும் படி தினம்தோறும் சத்துள்ள உணவை வழங்கினார் மற்றும் மன அழுத்தம் ஏற்படாத வகையில் நல்ல ஆலோசனைகளை காவலர்களுக்கும் வழங்கி வருகிறார். இப்படி வெயில் மழை குளிர் பாராமல் தன்னுடைய குடும்பத்தையும் மறந்து பொதுமக்களின் நலனுக்காகவே தன்னுடைய பணியை சேவையாக கருதாமல் மிகவும் நேர்மையாகவும் தியாகமாக செய்து வருகிறார் செம்மஞ்சேரி காவல்துறை ஆய்வாளர் திரு.விஜயகுமார் அவர்கள் என்று அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் கூறுகின்றனர்.