மனித உயிரைக் காக்கும் பொருட்டு கொரோனா மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.ஆனந்த்குமார் அவர்கள்
மக்களுக்காக அற்புதமான கலைநிகழ்ச்சிகள் மூலமாகவும் மற்றும் ஒலிபெருக்கி மூலமாகவும் இசை மூலமாகவும் துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் OMR PTC Colony சந்திப்பில் 23.10.2020 மதியம் 12.00 மணியளவில் மாற்று திறனாளிகள் ஆட்டோ ஓட்டுனர்கள்,இரு சக்கர ஓட்டுநர்கள் , பாதசாரிகள் அரசாங்க ஊழியர்கள் தனியார் ஊழியர்கள் மற்றும் பெண்கள் உட்பட ஆகிய அனைவரையும் ஒன்றினைத்து சமூக இடைவெளி விட்டு ஒவ்வொருவரையும் தனித்தனியாக அமரவைத்து வீட்டைவிட்டு வெளியே வரும்போது முககவசம் எவ்வளவு முக்கியம் என்பதை பற்றியும் ஹெல்மெட் எவ்வளவு முக்கியம் என்பதை பற்றியும் ஒரு குடும்பத்துக்கு உயிர் எவ்வளவு முக்கியம் என்பதை பற்றியும் ஒருவர் விபத்தில் சிக்கினால் எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்றும் இருமல் சளி ஆகியவை இருந்தால் உடனடியாக மருத்துவரை செல்ல வேண்டும் என்ற அறிவுரையும் போன்ற நல்ல செயல்களை அன்பாகவும் மரியாதையாகவும் தாயுள்ளத்தோடும் நல்எண்ணத்தோடும்தன் சொந்த செலவில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திகொண்டிருக்கிறார் துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.ஆனந்குமார் அவர்கள் . இதுமட்டுமல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக முக கவசம் சாப்பிட சத்தான உணவு மற்றும் மருந்துகள் ஆகியவை தன்னுடைய ஊதியத்தில் இருந்து வழங்கி வருகிறார்.இரவு பகல் பாராமல் தன்னுடைய சொந்த குடும்பத்தையும் மறந்து சரியான நேரத்தில் உணவு சாப்பிடாமல் மழை வெயில் என்று பாராமல் இப்படி காவலதுறைவயினரிடையே உதாரணமாக திகழ்கிறார் துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.ஆனந்த்குமார் அவர்கள்.