மதுரை, எல்லீஸ் நகரில், மூதாட்டி கொல்லப்பட்ட விவகாரம், 3 மாதத்திற்கு பிறகு குற்றவாளி சிக்கியது எப்படி?
மதுரை, S.S.காலனி காவல் நிலையத்திற்குட்பட்ட எல்லீஸ் நகர் பகுதியில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பஞ்சவரணம் என்ற மூதாட்டியை கொடூரமாக மர்மக் கும்பல் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடியது.
இது மட்டுமல்லாமல் மூதாட்டி அணிந்திருந்த 6 சவரன் நகை மற்றும் வீட்டில் இருந்த 50,000/−ரூபாயையும் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பாக எட்டிற்கும் மேற்பட்ட தனிப் படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மூன்று மாதமாக விசாரணையில் பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட்டது, இந்த நிலையில் மூன்று மாதத்திற்கு பிறகு மூதாட்டி வீட்டிற்கு எதிரே சலவை தொழில் செய்து வரும் பழனிமுருகன் என்பவர்தான் குற்றவாளி என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
காவல் துறையின், பல்வேறு கட்ட விசாரணையில் சிசிடிவி கேமராவில் பழனிமுருகன் பலமுறை தன்னுடைய உடையை மாற்றி இருந்தது தெரிய வந்தது, உடையை மாற்றியதற்கு காரணம் கேட்ட போது சரிவர பதில் கூற மறுத்துள்ளார். இந்த நிலையில் அவரை காவல் துறையினர் விசாரணைக்கு உட்படுத்திய போது அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார், அதில் மூதாட்டியை கொலை செய்வதற்கு முன்பு ஒரு ஆடையும் கொலை செய்த காரணத்தால் ஆடை முழுவதும் இரத்த கரை படிந்ததால் புதிய ஆடை அணிந்து மீண்டும் பணிக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். காவல் உதவி ஆணையர் திரு. சக்கரவர்த்தி அவர்களின் திறமையான முயற்ச்சியினாலும், காவல் ஆய்வாளர் சக்கரவர்த்தி அவர்களின் துரிதமான விசாரணையில் கொலை குற்றவாளியை திறம்பட செயல்பட்டு கைது செய்தனர்.