மதுரை நேதாஜி சாலையில் உள்ள பிரபல நகை கடையில் போலி நகையை கொடுத்து ஏமாற்ற முயன்ற இரண்டு பெண்கள்
மதுரை மாநகர் திலகர் திடல் C4, குற்றப்பிரிவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான மதுரை, நேதாஜி ரோட்டில் இயங்கி வரும் பிரபல நகைக் கடையில் போலி நகையை கொடுத்து ஏமாற்றிய இரண்டு பெண்கள்.
கடந்த 2 ம் தேதி மதியம் சுமார் 12.30 மணியளவில் மதுரை, நேதாஜி சாலையில் அமைந்திருக்கும் பிரபல நகைக் கடைக்கு இரண்டு பெண்கள் தங்களிடமிருந்த நெக்லஸை கொடுத்து புதிய தங்க ஆபரணம் வாங்குவதற்காக வந்தனர், கடை ஊழியர்கள் நெக்லஸை சோதித்து பார்த்த போது அது போலி என தெரிய வந்தது, உடனே, நகைக் கடை மேலாளர் அவர்கள் திலகர் திடல் C4, காவல் நிலையத்திற்கு தகவல் கூறியதும், தகவல் அறிந்த குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. சுஜாதா அவர்களின் தலைமையில் காவலர்கள் சென்று, நகை கடை மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இரண்டு பெண்களையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர், அங்கு அவர்கள் இருவர் மீதும் காவல் ஆய்வாளர் திருமதி. சுஜாதா அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தினார், விசாரணையில் அவர்கள் மதுரை, தெற்கு வாசல் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி அவர்களின் மனைவி முத்துலெட்சுமி வயது 65, மற்றும் மதுரை, கீரைத்துரை பகுதியை சேர்ந்த சுப்புராமன் மனைவி வனிதா வயது 36 எனவும் தெரிய வந்தது, விசாரணையில் அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி, நீதி மன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.