Police Department News

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 38 கிலோ கஞ்சா சிக்கியது: ரயில்வே ஆய்வாளர் சசிகலா அவர்களின் தலைமையில் 3 பேர் கைது

சென்னை, 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 38 கிலோ கஞ்சா கடத்தி வந்த 3 நபர்களை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளர் திருமதி.சசிகலா அவர்களின் தலைமையில் மற்றும் தலைமைக்காவலர்கள் பாண்டியன், ரமேஷ்குமார் ஆகியோர் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அஸ்ஸாம் மாநிலம் காமாக்கியாவில் இருந்து பெங்களூரு, எஸ்வந்த்பூர் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் சென்ட்ரல் ரயில் நிலைய 10வது பிளாட்பார்மில் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கி நடந்து மூன்று பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது உள்ளே 6 பாக்கெட்டுக்களில் 38 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் அஸ்ஸாமைச் சேர்ந்த லால்பகதுார் (வயது 29), நுார் இஸ்லாம் (23), மோபிபுய் இஸ்லாம் (23) என்பது தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.