காவலர் குடும்ப சுய தொழில் மையம்:
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு. மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் துவங்கி வைத்தார்.
சென்னை நகர காவல் துறையில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் குடும்பத்துக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.காவலர் குடும்பத்தை சேர்ந்த 139 குழந்தைகளுக்கு விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடப்பிரிவில் சேர்க்கை அனுமதி மற்றும் பணியின்போது உயிரிழந்த காவல் அதிகாரிகளின் குழந்தைகளுக்கு ரூபாய் 10 லட்சத்திற்கும் மேலான கல்வி உதவித்தொகையை வழங்கி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் பல உதவிகளை செய்து வருகிறார். அதனைத் தொடர்ந்து காவலர் குடும்பத்திற்காக சுயதொழில் செய்ய பயிற்சி அளிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தும் பணி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் ஆலோசனையின் பேரில் நடைபெற்று வந்தது. அதன் தொடர்ச்சியாக சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் காவலர் குடும்ப சுய தொழில் மையத்தை கமிஷனர் நேற்று தொடங்கி வைத்தார்.