Police Department News

கொரோனா தடுப்பூசி போடுவதாக கூறி, பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டு 19 பவுன் நகை திருட்டு

கொரோனா தடுப்பூசி போடுவதாக கூறி, பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டு 19 பவுன் நகை திருட்டு

திட்டக்குடியை அடுத்து லக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, இவரது மனைவி ராசாத்தி இவரது அத்தை மகளான பெரம்பலூர் மாவட்டம் கீழக்குடி காட்டைச் சேர்ந்த சத்தியபிரியா வயது 31, என்பவர் லக்கூரில் உள்ள கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு நேற்று முன் தினம் இரவு சென்றுள்ளார், பின்னர் கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினருடன் உங்களுக்கு கொரோனா தடுப்பூசி வாங்கி வந்துள்ளதாகவும், அதை செலுத்தி கொண்டால் கொரோனா நோய் வராது எனவும் கூறியுள்ளார், இதனை நம்பிய கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினர், ஊசி போட்டுக்கொள்ள சம்மதித்துள்ளனர் இதனையடுத்து கிருஷ்ணமூர்தி அவர்களது மனைவி மற்ற இரு மகள்களுக்கும் சத்தியப்பிரியா மயக்க ஊசி போட்டுள்ளார். ஊசி போட்ட பிறகு நால்வரும் மயக்கத்தில் உறங்கினர். இதையடுத்து சத்தியப்பிரியா கிருஷ்ணமூர்த்தியின் மனைவி ராசாத்தி அவர்களின் கழுத்திலிருந்த 6 பவுன் செயின், மூத்த மகள் கிருத்திகா கழுத்திலிருந்த 10 பவுன் செயீன், ஒரு பவுன் செயின் மற்றொரு மகளான மோனிகா அணிந்திருந்த இரண்டு பவுன் செயின் மொத்தம் 19 பவுன் நகைகளை கழட்டிக் கொண்டு நள்ளிரவில் சத்தியபிரியா அங்கிருந்து தப்பியுள்ளார். மயக்கம் தெளிந்து நேற்று காலை எழுந்த கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினர் கழுத்தில் அணிந்திருந்த நகைகள் இல்லாததை அறிந்தனர். உடனே ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் இதனை அடுத்து உடனடியாக விசாரணையில் இறங்கிய ராமநத்தம் போலீசார் நகைகளுடன் தலைமறைவான சத்தியபிரியாவை கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் நகை திருடியதை ஒப்புக்கொண்ட சத்தியபிரியா திருடிய நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்தார்.இதனையடுத்து போலீசார் சத்திய பிரியாவை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.