மதுரை: மதுரை புறநகர் பகுதிகளில் பூட்டிய வீடுகளில் நடக்கும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் விதமாக புதிய செயலி(ஆப்) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான அறிமுக விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்தது. மதுரை சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் புதிய செயலியை அறிமுகப்படுத்தினர். இதைதொடர்ந்து டி.ஐ.ஜி. பிரதீப்குமார் பேசியதாவது, மதுரை புறநகர் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன. பூட்டிய வீடுகளில் ஆள் நடமாட்டம் இருக்காது என்பதால் வீடுகளை கண்காணித்து […]
Author: policeenews
துபாயில் இருந்து சென்னை விமானத்தில் நூதனமாக தங்கம் கடத்த முயற்சி
சென்னை: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானம் சென்னையில் இருந்து மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். இதற்காக விமானத்தை, விமான நிறுவன துப்புரவு ஊழியர்கள் சுத்தம் செய்துகொண்டிருந்தனர். அப்போது விமானத்தில் உள்ள கழிவறை தொட்டியில் 2 கருப்பு நிற பைகள் இருந்ததை ஊழியர்கள் கண்டனர். உடனே விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து சென்று பார்த்தனர். அந்த பைகளில் வெடிகுண்டு இருக்குமோ? […]
குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு
திருவள்ளூர்: ஆந்திர மாநில மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில் கைது செய்யப்பட்ட முத்து ஏற்கனவே 3 முறை ஆந்திர மதுபாட்டில்களை தமிழகத்திற்கு கடத்தி வந்து பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்க முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 3 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வரும் முத்துவை குண்டர் […]
கூலித்தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது
சென்னை: புளியந்தோப்பு ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் மணிமாறன் (21) கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு புளியந்தோப்பு வழியாக தனது மோட்டார் சைக்கிளில் பட்டாளம் நோக்கி சென்றார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி, விலை உயர்ந்த செல்போன், ரூ.3 ஆயிரத்தை பறித்துச்சென்றனர். இதுகுறித்து புளியந்தோப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க புளியந்தோப்பு துணை ஆணையர் சியாமளாதேவி உத்தரவின் பேரில் உதவி ஆணையர் திரு.விஜய்ஆனந்த் […]
25th FOP Anniversary Celebration
” order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]
விநாயகர் சதுர்த்தி விழா
விநாயகர் சதுர்த்தி விழா ஈரோடுமாவட்டம் சத்தியமங்களம் தாலூகா புன்செய் புளியம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் 29-08-2017 புதன்கிழமை அன்று நடைபெற்றது.இவ்விழாவில் ADSP சுந்தர பாண்டியன் அவர்கள் தலைமையில் 4 DSP ,10 inspector மற்றும் 323 காவலர்கள் கலந்து கொண்டு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தனர்.ஊர்வலத்திற்கு சிறப்பாக பாதுகாப்பு அளித்த காவல்துறைக்கு ALL INDIA JURNALIST CLUB மற்றும் POLICE E NEWS மற்றும் ஈரோடு மாவட்ட ALL INDIA JURNALIST CLUB தலைவர்,செயலாளர் சார்பாக நன்றி…நன்றி..நன்றி…
HELMET விழிப்புணர்வு பேரணி
ஈரோடு மாவட்டம் சத்தி தாலூகா புன்செய்புளியம்பட்டியில் காவல் துறை சார்பாக இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.இதில் நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.POLICE E NEWS நிருபர் மருதாசல மூர்த்தி மற்றும் நாகராசன்.
காவல்துறை அறிவிப்பு
தமிழக காவல்துறை பணிபுரியும் அணைத்து காவல் ஆளுனர்களுக்கும் காவல்துறை சார்ந்த நலத்திட்டங்கள்/குறைகள்/கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின் அது குறித்து மனு / தகவல் தெரிவிக்க tnpolicewelfare@gmail.com எனும் மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சென்னையில் போலி ஏ.டி.எம். கார்டு மூலம் கொள்ளை முயற்சி வாலிபர் கைது
சென்னை: சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் ஏஜாஸ்கான் (34) இவர் நேற்று முன்தினம் இரவு சென்னை அபிராமபுரம் பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம். ஒன்றில் பணம் எடுக்க முயற்சித்தார். நீண்ட நேரமாக இவர் பணம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதால், அந்த வழியாக ரோந்து வந்த காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர். அவரை பிடித்து விசாரித்தபோது அவர் வெளிநாட்டில் வசிக்கும் வங்கி வாடிக்கையாளர் ஒருவரின் போலி ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயற்சித்தது கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர விசாரணைக்கு பிறகு அவர் […]