
சட்டம், ஒழுங்கு நிலை குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப் போது பெண்களின் பாதுகாப் புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறி வுரை வழங்கியுள்ளார்.
குண்டர் சட்டம்
கொலை, கொள்ளை, வழிப் பறி உட்பட அனைத்து வகை யான குற்ற செயல்களையும் முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வ நாதன் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகள், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
சட்டம் ஒழுங்கை மேலும் வலுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோ சிப்பதற்கான கூட்டம் காவல் ஆணையர் தலைமையில் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கூடுதல் காவல் ஆணை யர்கள் தினகரன், பிரேம் ஆனந்த் சின்ஹா, ஈஸ்வர மூர்த்தி, ஜெயராம், இணை ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
தலைமறைவு ரவுடிகள்
அப்போது, பெண்கள் பாது காப்புக்கு அதிக முக்கியத் துவம் கொடுக்க வேண்டும், பெண் தொடர்பான புகார்களை உடனுக்குடன் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தலைமறைவு ரவுடிகளை கைது செய்து சிறை யில் அடைக்க வேண்டும் உள்பட பல்வேறு அறிவுரை களை போலீஸ் அதிகாரி களுக்கு ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வழங்கினார்.