கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்த, பல்வேறு வகையான, 74 பாம்புகளை, வனத் துறையினர் பிடித்து, காப்புக் காட்டில் விட்டனர். கிருஷ்ணகிரி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட தட்டக்கல், காவேரிப்பட்டணம், பர்கூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில், நாகப் பாம்புகள், மலைப்பாம்புகள் புகுந்ததாக, வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற வனத் துறையினர், ஒன்பது மலைப்பாம்புகள், ஒரு கண்ணாடி விரியன் பாம்பை பிடித்தனர். கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர், நாகேஷ் கூறியதாவது: குடியிருப்பு பகுதிகளில், பாம்புகள் […]
Author: policeenews
சசிகுமார் கொலையில் தேடபட்ட குற்றவாளி கைது பழிக்குப்பழியாக செய்ததாக பரபரப்பு தகவல்
கோயம்புத்தூர்: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக தேடப்பட்டு வந்த முபாரக் என்பவர் கைது செய்யப்பட்டார். ஜன.9-ம் தேதி வரை அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் சுப்பிரமணியம் பாளையத்தைச் சேர்ந்தவர் சசிகுமார்(36). இந்து முன்னணியின் மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்த இவர், கடந்த ஆண்டு செப்.22-ம் தேதி துடியலூர் அருகே மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பையும், வன்முறையையும் ஏற்படுத்தியது. அதையடுத்து இந்த வழக்கு […]
புதுமை செய்வோம்”சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் முனைவர் . A.K. விஸ்வநாதன் IPS அவர்கள் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
சென்னை: ‘காவல்துறை பொதுமக்களின் நண்பன்’ என்ற சொல்லிற்கேற்ப சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்களின் நல்லிணக்க முயற்சியாக, பொதுமக்களுக்கும் காவல்துறைக்குமான உறவை மேம்படுத்தும் வகையில் மாங்காடு காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கோவூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர்களில் தேசத்தலைவர்களின் படங்கள், ஓவியங்கள் மற்றும் பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறந்த வாசகங்கள் ஆகியவற்றை சென்னை பெருநகரக் காவலின் நுண்ணறிவுப் பிரிவைச் சேர்ந்த காவலர்கள் திரு. R. மதுசூதனன் மற்றும் திரு. S. […]
ரூ.20 நோட்டுகள் மூலம் பணப்பட்டுவாடா செய்ய முயன்றதாக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 4 பேர் கைது
சென்னை ஆர்.கே.நகரில், வாக்களித்தவர்களுக்கு பணம் கொடுக்க 20 ரூபாய் நோட்டு டோக்கன் கொடுத்ததாக டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட குறிப்பேட்டில் 450 பேருக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுத்ததாக எழுதி வைக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆர்.கே.நகருக்கு உட்பட்ட கொருக்குப் பேட்டை மீனாம்பாள் நகரில் தேர்தலுக்கு முன்னதாக சிலர் 20 ரூபாய் நோட்டு டோக்கன் கொடுத்ததாகவும், தேர்தல் முடிவு வந்தபின்னர் டோக்கன் கொடுத்தவர்களை மடக்கி பணம் கேட்டு சிலர் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. […]
லட்சுமி விலாஸ் வங்கியில் கொள்ளை முயற்சி
அரியலூர் லட்சுமி விலாஸ் வங்கியில் நடைபெற்ற கொள்ளை முயற்சியில் லாக்கரை உடைக்க முடியாததால் பலகோடி ரூபாய் மதிப்பிலான் பணம் நகைகள் தப்பின. 3 நாள் வங்கி விடுமுறைக்குப் பின் இன்று வங்கியைத் திறக்க வந்த மேலாளர் கேட்டின் உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து போலீசார் வந்தபோது வங்கியின் பக்கவாட்டு ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டு கொள்ளையர்கள் நுழைந்தது தெரியவந்தது. கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணை நடத்திய போலீசார், வங்கியின் […]
ராணுவ ‘குரூப்-சி’ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்
இந்திய ராணுவத்தில் ‘குரூப்-சி’ பணியிடங்களுக்கு 818 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். இந்திய ராணுவத்தில் ‘குரூப்-சி’ தொகுதியின் கீழ் அடங்கியுள்ள கிளார்க், ஸ்டெனோகிராபர், தீயணைப்பு வீரர்கள், உதவியாளர்கள், பிட்டர், டெய்லர், பெயின்டர், எலக்ட்ரீஷியன், கார்பென்டர், சமையல் கலைஞர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணியிடங்களின் மொத்த காலி எண்ணிக்கை 818. இடஒதுக்கீடுப்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்படும். www.aocrecruitment.gov.in என்ற இணையதளம் மூலம் […]
காவல்துறையினர் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்ற 2 பேர் கைது
திருநெல்வேலி: தென்காசியில் இருந்து கோவில்பட்டிக்கு லாரியில் மணல் கடத்துவதாக திருவேங்கடம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருவேங்கடம் காவல் உதவி- ஆய்வாளர்கள் திரு.ராஜா, திரு.மாரிச்செல்வம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சங்கரன்கோவில் பகுதியில் இருந்து வேகமாக வந்த லாரியை நிறுத்துமாறு காவல்துறையினர் சைகை காட்டினர். ஆனால் லாரி நிற்காமல் நேராக உதவி- ஆய்வாளர்கள் திரு.ராஜா, திரு.மாரிச்செல்வம் மீது மோதுவது போல் வேகமாக வந்தது. உடனே இருவரும் சுதாரித்துக் கொண்டு உயிர் தப்பினர். […]
புதுக்கோட்டையில் மது பாட்டில்கள் பறிமுதல்
புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டை வண்ணாரப்பட்டியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, அங்கிருந்து திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு சிறிய வாகனங்களில் எடுத்து சென்று விற்பனை செய்யப்பட்டு வருவதாக புதுக்கோட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இளங்கோவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வராஜ் உத்தரவின்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இளங்கோ மற்றும் காவல்துறையினர் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணியளவில் கணபதிபுரத்தில் உள்ள சம்பந்தப்பட்ட பண்ணை வீட்டில் […]
ஈரோடு வ.உ.சி. பூங்காவில் ஜூராசிக் பார்க் கண்காட்சி தொடங்கியது
ஈரோடு: சிவன்யா ஈவன்ட்ஸ் மற்றும் புரமோசன்ஸ் சார்பில் ஜூராசிக் பார்க் கண்காட்சி ஈரோடு வ.உ.சி. பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆர்.சிவக்குமார் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி வைத்தார். இதுகுறித்து கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ராஜ்குமார், கருணாகரன் ஆகியோர் கூறும்போது, “ஈரோட்டில் முதல் முறையாக ஜூராசிக் பார்க் கண்காட்சி தொடங்கப்பட்டு உள்ளது. இதன் நுழைவு வாயிலில் மலையின் குகைக்குள் செல்வது போன்று அமைக்கப்பட்டு […]
காஞ்சிபுரத்தில் கார் கடத்தல் கும்பல் கைது
காஞ்சிபுரம்: அச்சிறுப்பாக்கம் காவல்துறையினர், நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எலப்பாக்கத்திலிருந்து வேகமாக வந்த, ‘இன்னோவா’ காரை சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் மடக்கினர். காரில் வந்தவர்களை விசாரித்த போது, கார் கடத்தல் கும்பல் என்பது தெரிந்தது. மேலும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், தொழுப்பேடு சுங்கச்சாவடி அருகே கார்களை இவர்கள் கடத்தியதும் தெரிந்தது. நள்ளிரவில் கார்களை மடக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி, உரிமையாளர்களிடம் இருந்து கார்களை கடத்துவது இவர்களின் பாணி. மேலும், திருட்டுக் கார்களை […]