விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார், 25; பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி இவர், நண்பர் சுரேஷ், என்பவருடன் மோட்டார் பைக்கில் சென்றபோது, ராதாபுரம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த விக்ரவாண்டி காவல் ஆய்வாளர் திரு.இளஞ்செழியனை கத்தியால் குத்தினார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து, வினோத்குமாரை கைது செய்தனர். இவர், கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால், அவரது நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு, காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில், வினோத்குமாரை, குண்டர் தடுப்பு […]
Police Department News
காஞ்சிபுரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த, மாமண்டூர் பாலாற்றில் மணல் கடத்தப்படுவதாக, காவல்துறையினருக்கு தகவல் வந்தது. நேற்று முன்தினம், படாளம் காவல்துறையினர், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மணல் கடத்தி வந்த மூன்று மாட்டு வண்டிகளை மடக்கினர். விசாரணைக்கு பின், வடபாதியைச் சேர்ந்த மணிமாறன், (31) தாமோதரன், (34) விஸ்வநாதன், (29) ஆகியோரை கைது செய்தனர்; மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரத்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்கள் கைது
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் உட்கோட்ட காவல் நிலையப் பகுதியில், மோட்டார் பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், வௌ;வேறு இடங்களில் நான்கு பெண்களிடம் தாலி செயினை பறித்துச் சென்றனர். அவர்களை பொதுமக்கள் உதவியுடன், மரக்காணம் காவல் ஆய்வாளர் வளர்மதி, தனிப்படை உதவி- ஆய்வாளர் திரு.செல்வம், ஏட்டு திரு.முனுசாமி, திரு.முகமதுஷபி ஆகியோர் மடக்கி பிடித்தனர். விசாரணையில், வழிபறியில் ஈடுபட்டவர்கள் சென்னையைச் சேர்ந்த மெய்தீன் மகன் ஷாதிக்பாஷா, 23, கொல்கத்தா பகுதியைச் சேர்ந்த ஜோசப்ராஜ் மகன் பிரேம்ஜோசப், 25, […]
ரேடியோ ஜாக்கிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் ‘கஜல்’ ஸ்ரீநிவாஸ் கைது
ரேடியோ ஜாக்கியாக பணியாற்றும் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக பிரபல பாடகர் ‘கஜல்’ ஸ்ரீநிவாஸை ஹைதராபாத் போலீஸார் நேற்று கைது செய்தனர். ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளத்தை சேர்ந்தவர் ‘கஜல்’ ஸ்ரீநிவாஸ் (51). பிரபல பாடகரான இவர் தெலுங்கு படங்களில் பாடியுள்ளார். காந்தியத்தை அனைத்து நாடுகளுக்கும் தெரியப்படுத்தும் வகையில் 125 உலக மொழிகளில் காந்தியத்தை கஜலில் பாடினார். இதன் மூலம் 2 முறை கின்னஸ் சாதனை புத்தகத்திலும் ஒரு முறை லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தார். ஹைதராபாத்தில், […]
கடத்தல்காரர்கள் தாக்கியதில் போலீஸ் காவலர் காயம் சேஷாசலம் வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு: ரூ.1.5 கோடி செம்மரக் கட்டைகள் பறிமுதல்
திருப்பதி வனப்பகுதியில் நேற்று அதிகாலைஅதிரடிப்படையினர் மீது செம்மர கடத்தல் கும்பல் கற்களாலும், கத்தியாலும் தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ் படையை சேர்ந்த ஒருவர் காயமடைந்தார். கடத்தல்காரர்களை விரட்ட துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. 32 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சேஷாசலம் வனப்பகுதியில் நேற்று அதிகாலை அதிரடிப்படையினர் ரிசர்வ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஸ்ரீவாரி மெட்டு பகுதியில், தேவுன்னி குடி என்கிற இடத்தில், தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 60 பேர் அடங்கிய கும்பல், செம்மரங்களை […]
ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி உட்பட மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி உட்பட ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல்துறையில் எஸ்பி அந்தஸ்து ஐபிஎஸ் அதிகாரிகள் மூன்று பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார். மாற்றப்பட்ட அதிகாரிகள் விபரம் 1.கன்னியாகுமரி காவல் கண்காணிப்பாளரான துரை ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். 2. ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி பொறுப்பில் இருந்து ப்ரவீன் குமார் சிபிசிஐடி எஸ்பியாக […]
வேலூர் மாவட்டத்தில் 2017-ல் 718 குற்றவாளிகள் கைது, சாலை விபத்தில் 637 பேர் பலி
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 2017 ஆண்டில் மட்டும் 718 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இ பகலவன் தெரிவித்து உள்ளார் வேலூர் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, மற்றும் வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 774 ரவுடிகளின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, 718 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான 56 ரவுடிகளை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 368 பேரில் கடந்தாண்டு […]
புத்தாண்டு கொண்டாட்டம்: குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க தடை இல்லா சான்று இல்லை சென்னை கூடுதல் போக்குவரத்து ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்
புத்தாண்டு நாளுக்கு முந்தைய இரவு குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 125 பேருக்கு பாஸ்போர்ட் பெறுவதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்கப்படாது என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தபடி, குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 103 இருசக்கர வாகன ஓட்டிகள், 13 கார் ஓட்டுநர்கள் உள்ளிட்ட 125 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் பாஸ்போர்ட் பெறுவதற்கான தடையில்லா சான்று வழங்கப்பட மாட்டாது என 2016 ஆம் ஆண்டில் சென்னையில் […]
.ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்Dr.R. சிவக்குமார் கூறியுள்ளார்.ஈரோட்டில் கடந்த ஆண்டு 5,481 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிக ரத்து
ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த ஆண்டு 5,481 நபர்களின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.R. சிவக்குமார் அவர்கள் கூறியுள்ளார். பல்வேறு இடங்களில் நடந்த 32 கொலை வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்ட அவர், குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 18 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். சாலை விபத்துக்கள் கடந்த ஆண்டு 8 சதவீதம் அதிகரித்தாக மாவட்ட […]
சென்னை விமான நிலையத்தில் ரூ.23 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து நூதனமுறையில் கடத்தி வரப்பட்ட 23 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை, சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த நவாஸ் என்ற இளைஞர் பாப்கார்ன் தயாரிக்கும் இயந்திரம் மற்றும் ஃபோர்டபுள் சிடி பிளேயர் ஆகியவற்றை கொண்டு வந்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அந்த இரண்டு பொருட்களும் வழக்கத்துக்கு மாறான எடையுடன் இருந்ததால், அவற்றை பிரித்துப் பார்த்தனர். அப்போது, பாப்கார்ன் தயாரிக்கும் இயந்திரத்தில் சில்வர் முலாம் […]









