காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த, மாமண்டூர் பாலாற்றில் மணல் கடத்தப்படுவதாக, காவல்துறையினருக்கு தகவல் வந்தது. நேற்று முன்தினம், படாளம் காவல்துறையினர், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மணல் கடத்தி வந்த மூன்று மாட்டு வண்டிகளை மடக்கினர். விசாரணைக்கு பின், வடபாதியைச் சேர்ந்த மணிமாறன், (31) தாமோதரன், (34) விஸ்வநாதன், (29) ஆகியோரை கைது செய்தனர்; மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
