விருதுநகர் மாவட்டம்:-
பெருகி வரும் இரண்டாம் அலை கொரோனாவால் விழிப்புணர்வு நிகழ்ச்சி…
சென்ற வருடம் மார்ச் மாதம் ஆரம்பித்த கொரோனா தாக்கம் முழுமையாக முடிவடையாத நிலையில்.
மீண்டும் நாடுமுழுவதும் தலைதூக்கியுள்ளது அதனை கட்டுப்படுத்தும் விதமாக காவல் துறையினர் தீவிர வாகன சோதனை முககவசம் அணியாவிட்டால் அபராதமும் விதித்து வருகின்றனர்.
இவை தவிர ஆங்காங்கே பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்சியும்.
பேருந்து ஓட்டுநர் நடத்துனர்,ஆட்டோ ஓட்டுநர்,இவை தவிர பேருந்து பயணிகளிடமும் முககவசம் விழிப்புணர்வு பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியானது அருப்புக்கோட்டை போக்குவரத்து காவல் துறை சார்பில் சார்பு ஆய்வாளர் திரு.செல்லதுரை, திரு.ஆனந்த் காவலர்கள் உள்ளிட்டோர் இதில் ஈடுபட்டிருந்தனர்.
குறிப்பாக காவல் துறையினரும் முககவசம் அணிந்து விழிப்புணர்வில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.