மதுரை, உசிலம்பட்டி அருகே இளம் பெண் தூக்குப் போட்டு தற்கொலை, உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரணை
உசிலம்பட்டி அருகே இளம் பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டியை சேர்ந்தவர் பரமன் இவரது மகன் முருகசாமி வரது 30/21, இவருக்கு உசிலம்பட்டி அருகே சுளிஒச்சான்பட்டியை சேர்ந்த செல்வம் மகள் பிரியதர்ஷினிக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தைகள் ஏதும் இல்லை. முருகசாமி மது குடித்து விட்டு வந்து அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் கஞ்சா தொழிலில் ஈடுபட்டதாக போலீசார் முருகேசனை கைது செய்தனர். அவர் கடந்த சில நாட்களுக்கு முன் சிறையிலிருந்து வெளியில் வந்தார். ஆனால் முருகசாமி மீண்டும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் மன வேதனையடைந்த அவர் கீரிபட்டியில் உள்ள தோட்டத்தில் இருந்த மாட்டுக் கொட்டகையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி போலீசார் அந்த பெண்ணின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தன் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி செல்வம் உசிலம்பட்டி தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 3 வருடங்களில் அவர் தற்கொலை செய்து கொண்டதால் உசிலம்பட்டி ஆர.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.