மதுரை, செல்லூர், குலமங்களம் மெயின் ரோட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபர் கைது, செல்லூர் போலீசார் அதிரடி நடவடிக்கை
மதுரை செல்லூர் D2, சட்டம் ஒழுங்கு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.கனேசன் அவர்கள் மற்றும் தலைமை காவலர் செந்தில்பாண்டி, முதல்நிலை காவலர் திரு.சிலம்பரசன் ஆகியோருடன் சட்டம் ஒழுங்கு மற்றறும் குற்றத்தடுப்பு நடவடிககையாக நிலைய ஆய்வாளர் திரு.அழகர் அவர்களின் உத்தரவின்படி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது, மதுரை செல்லூர் குலமங்களம் மெயின் ரோடு, மண்ணெண்னை பல்க் அருகில் ரோந்து பணியில் ஈடுபடும் போது, அங்கே ஒரு நபர் சந்தேகப்படும்படியாக கையில் வெள்ளை கலர் பையுடன் நின்றுகொண்டிருக்க அவர் போலீசாரை பார்த்தவுடன் தப்பியோட எத்தனித்தார் உடனே போலீசார் அவரை மடக்கிப் பிடித்து விசாரித்த போது அவர் மதுரை, செல்லூர் அஹிம்சாபுரம் 4 வது தெருவை சேர்ந்த பஞ்சம்மாள் காம்பவுண்டில் குடியிருக்கும் மாயி மகன் சிவசாமி வயது 30/21, என தெரியவந்தது, அவர் கையில் வைத்திருந்த வெள்ளை கலர் பையை சோதனை செய்து பார்த்தபோது அதில் 40 மது பாட்டில்கள் இருந்தன, அவை அனைத்தும் ஊரடங்கு சமயத்தில் இனம்தெரியாத நபர்களுக்கு அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் முன் கூட்டிய ஒயின் ஷாப்பில் வாங்கி வைக்கப்பட்டவை என தெரிய வந்தது, பிடிபட்ட சிவசாமி குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பேரில் அவரை கைது செய்து அவரிடமிருந்த மது பாட்டில்கள் 40 யும் கைபற்றி காவல்நிலையம் அழைத்து வந்து ஆய்வாளர் திரு. அழகர் அவர்களின் உத்தரவின்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர், எதிரி சிவசாமி தகுந்த பிணையில் விடுவிக்கப்பட்டார் வழக்கு விசாரணையில் உள்ளது.