பொதுமக்களை அன்புடன் வரவேற்க வரவேற்பாளர்கள் நியமனம்…
மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் உத்தரவுப்படி அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களை அன்புடன் வரவேற்க சுழற்சி முறையில் வரவேற்பாளர்களை (Receptionist) நியமிக்க உத்தரவிட்டுள்ளார். வரவேற்பாளர்கள் அனைவரும் பொதுமக்களை அன்பாகவும் கண்ணியமாகவும் நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கொடுக்கும் புகார் மனுக்களை உடனடியாக பெற்று அவர்கள் பரிபூரண திருப்தியடையும்படி புகாரை விசாரணை செய்யும்படியும் அறிவுரைகள் வழங்கியுள்ளார்.