தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு நாளான நேற்று ஒரே நாளில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்தவர்கள் 470 பேர் மீது நடவடிக்கை 3 கார்கள் 5 ஆட்டோக்கள் உள்பட 372 வாகனங்கள் பறிமுதல்
தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு விதிமுறைகளை கடை பிடித்து ஒத்துழைப்பு கொடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயகுமார் அவர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் சட்டத்திற்கு புறம்பாக விதிகளை மீறி வாகனங்களில் சென்றவர்கள் 420 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டி 329 இரு சக்கர வாகனங்கள் 5 ஆட்டோ, மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இது தவிர தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் ரோந்து செல்லும் போது கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் இருப்பது தெரிந்தும் தீங்கு விளைவிக்கும் வகையில் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிந்தவர்கள், வாகனத்தில் சென்றவர்கள் என 53 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவின்படி வழக்குகள் பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள், 1 கார் மற்றும் 35 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தயவு செய்து தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு விதிமுறைகளையும், நெறிமுறைகளையும் கட்டாயம் கடைபிடிக்குமாறும். தயவு செய்து யாரும் விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே நடந்தோ வகனங்களிலோ சுற்றித்திரிய வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயகுமார் அவர்கள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.