
வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 210 கிலோ கஞ்சா மூன்று கார்கள் பறிமுதல் மற்றும் 6 எதிரிகள் கைது
ராணிப்பேட்டை போலீசாருக்கு கஞ்சா போன்ற போதை பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர நடவடிக்கைகள் மேற் கொண்டதின் பேரில் ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 30 கிலோ கஞ்சா கடத்தி வந்த எதிரி குமரேசன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி
வைக்கப்பட்டது. மேலும் ஆர்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 120 கிலோ கஞ்சா கடத்தி வந்த குப்தா சரண் சாகு , சுதிர் அல்பேரியா, தேவபிரதா தாஸ், ஆகிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தும் ஆற்காடு தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 60 கிலோ கஞ்சா கடத்தி வந்த ரெலிமஜி, கவுரப்திருபிடிக்கா, ஆகிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தும் மொத்தம் 210 கிலோ கஞ்சா மற்றும் மூன்று கார்கள் பறிமுதல் செய்து மற்றும் ஆறு நபர்களை கைது செய்யப்பட்டது
