புதுச்சேரி, நெட்டபாக்கம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் விபல்குமார், காவல்நிலையம் பின்புறம் உள்ள குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி அவரது குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்துவந்தனர். நெட்டப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் கலைச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்கவும், சிபிஐ விசாரணைக்கோரியும் இறந்தவரின் தந்தை புகார் மனுக்களை அம்மாநில ஆளுநர் மற்றும் முதலமைச்சரிடம் அளித்தார். விபல்குமாரின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி, அவரின் மனைவிக்கு அரசு வேலை ஆகிய வாக்குறுதி அரசு தரப்பில் முன்வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர் விபல்குமாரின் உடலை அவரது குடும்பம் பெற்றுக்கொண்டது. அதைத்தொடர்ந்து துப்பாக்கி குண்டுகள் முழங்க விபல்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஆய்வாளர் கலைச்செல்வன், ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் அயனாவரம் ரவி