Police Department News

மதுரை செல்லூர் பகுதியில் திருமணமான இளம் பெண் தூக்குப் போட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை செல்லூர் பகுதியில் திருமணமான இளம் பெண் தூக்குப் போட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை மாநகர் செல்லூர் D2, காவல்நிலைய சரகத்திற்குட்பட் பகுதியான செல்லூர் மேலத்தோப்பு, திருவாப்புடையார் கோவில் அருகே ஆண்டித்தேவர் காம்பவுண்டில் குடியிருந்து வருபவர் ரவி, மலர்கொடி தம்பதியினர் மேற்படி ரவி அவர்கள் மாட்டுத்தாவணியில் இலை வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு கார்த்திகா, திவ்யா என் இரண்டு மகள்கள் உள்ளனர். காரத்திகா என்பவரை அவரது தாய்மாமனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர், இரண்டாவது மகள் திவ்யாவை மற்றொரு தாய்மாமன் வைரமணி அவர்களின் மகன் வினோத்குமார் வயது 32 அவர்களுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு மித்ராஶ்ரீ என்ற 4 வயது பெண் குழந்தை உள்ளது. இவர்கள் செல்லூர் ௧பூந்தமல்லி நகரில் தனியாக வசித்து வந்தனர். மற்றொரு மகள் திவ்யா வயது 22/21, இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் தன் தாய் வீட்டில் வந்து தங்கி செல்லுவது வழக்கம் அதே போல் கடந்த 1 ம் தேதி திவ்யாவின் கணவர் தன் மனைவியை தன் மனைவியில் தாயார் வீட்டில் மாலை 5 மணியளவில் விட்டு சென்றுள்ளார்.அன்றிரவு அனைவரும் மாடியில் படுத்திருந்த நிலையில் திவ்யா மட்டும் கீழே படுத்திருந்தார். மறுநாள் 2 ம் தேதி அதிகாலை 3 மணியளவில் பாத் ரூமிற்கு செல்லுவதற்காக திவ்யாவின் தாயார் கீழே வந்து பார்த்த போது, அங்கே திவ்யா தனக்குதானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இதனை கண்ட அவர் திடுக்கிட்டு சத்தம் போட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது திவ்யா தூக்குப் போட்டு இறந்த நிலையில் இருந்தார் உடனே திவ்யாவின் தாயார் தன் உறவினர்களுக்கு தகவல் கூறிவிட்டு செல்லூர் காவல் நிலையம் வந்து தன் மகளின் இறப்புக்கு சட்டப்படியான விசாரதை நடத்தி, தங்களின் குல வழக்கப்படி உடலை நல்லடக்கம் செய்ய உதவும்படி கொடுத்த புகாரின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி லெக்ஷிமி அவர்கள் வழக்கு பதிபு செய்து ஆய்வாளர் திரு. அழகர் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published.