
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 03 நபர்களில் முதல் மற்றும் இரண்டாம் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் தல ரூ.50,000/- அபராதமும் மற்றொரு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 05 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.65,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021- ஆம் ஆண்டு ராஜபாண்டி என்பவரை கொலை செய்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா (எ) சிக்கனம்பட்டி ராஜா(59), சரத்குமார்(33) பிரகாஷ்(32) என்பவர்கள் உட்பட 06 நபர்களை சின்னாளப்பட்டி காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி சின்னாளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு.வசந்தகுமார் அவர்கள், நீதிமன்ற முதல் நிலை காவலர் திரு.பசுபதி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திரு.சூசை ராபர்ட் அவர்களின் சீரிய முயற்சியால் (05.04.2025) இன்று திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அவர்கள் 06 குற்றவாளிகளில் நான்காம்,ஐந்தாம் குற்றவாளிகள் விடுதலை மற்றும் மூன்றாம் குற்றவாளி இறந்த நிலையில் முதல் மற்றும் இரண்டாம் சரித்திர பதிவேடு குற்றவாளிகளான ராஜா (எ) சிக்கனம்பட்டி ராஜா, சரத்குமார் ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.50,000/- அபராதமும், மற்றொரு குற்றவாளியான பிரகாஷ் என்பவருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 05 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.65,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
