நேற்று இரவு மதுரை மாநகர் தல்லாகுளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.பாண்டியராஜன், சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.பிரகாஷ் மற்றும் ரோந்து காவலர்களுடன் சரக ரோந்து பணியில் இருந்தபோது சொக்கிகுளம் ஜவஹர் ரோட்டில் ஹூண்டாய் காரில் சந்தேகப்படும்படி இருந்த நான்கு நபர்களான 1. ஜெயராமன் 30/19 த/பெ. சரவணன், D/NO. 17, நந்தினி ஆயில் மில், வள்ளி நகர், அல்லிநகரம், தேனி மாவட்டம் 2. நாகராஜ் 29/19,த/பெ. சண்முகசுந்தரம் பிள்ளை சத்திரப்பட்டி சாலை, அரண்மனை புத்தூர், தேனி மாவட்டம், 3.மனோஜ் குமார் 28/19, த/பெ. பாண்டி கண்ணன், மல்லிகை மஹால் எதிரில், சமாதானபுரம், தேனி மாவட்டம், 4. சபர் பாலன் 33/19, த/பெ.காளியப்பன்,D/NO:24, 4 வது குறுக்கு தெரு, என்ஆர்டி ரோடு, தேனி மாவட்டம் ஆகியோர்களிடம் விசாரணை செய்தபோது அவர்கள் நான்குபேரும் சேர்ந்து பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க வந்ததாக ஒப்புக்கொண்டனர். எனவே அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ஹூண்டாய் கார் ஒன்று, இரண்டு கருப்பு கலர் பிளாஸ்டிக் பாக்ஸில் இருந்து சிறிய சிலிண்டர் மற்றும் சிலிண்டருக்கு பயன்படுத்தப்படும் இணைப்பு வயர் இரும்பு ராடு மற்றும் ட்ரில்லிங் மிஷின் ஆகியவை கைப்பற்றப்பட்டு இன்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்.